ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கரண்ட் இல்லை இலவசம் வாங்கி என்ன செய்ய ? கரண்ட் கொடுங்க அம்மா !



தமிழகம் முழுவதும் மின் தடை, மீண்டும் மக்களை வாட்டி எடுக்க ஆரம்பித்துள்ளது. இலவச கிரைண்டர், மிக்சி, மின்விசிறி திட்டம் முழுமையாக அமல்படுத்தும்போது, மின்சார தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், மின் தட்டுப்பாட்டைப் போக்க, தமிழக அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.


தமிழகத்தில், வீடு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலை என, 2.25 கோடி மின் இணைப்புகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவையென்ற நிலையில், 8,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே, தற்போது கிடைத்து வருகிறது. மீதமுள்ள, 2,500 மெகாவாட் மின்சாரத்தை பெற வெளிமாநிலங்களையும், காற்றாலைகளையும் அரசு நம்பியுள்ளது.சட்டசபை தேர்தலின்போது, மின் தடை, எதிர்க்கட்சிகளுக்கு பிரசார பீரங்கியாக அமைந்தது. புதிதாக பொறுப்பேற்ற, அ.தி.மு.க., அரசு, "மின் தட்டுப்பாட்டை உடனடியாக போக்குவோம்' என, உறுதியுடன் கூறியது. வெளி மாநிலத்திலிருந்து மின்சார கொள்முதல் செய்து, நிலைமையை சமாளித்தது. தற்போது மீண்டும் மின்தடை தலைதூக்கி உள்ளது.

இலவச கிரைண்டர் (350 வாட்ஸ்), மிக்சி (750 வாட்ஸ்), மின்விசிறி (60 வாட்ஸ்), இண்டக்சன் அடுப்பு (1,000 வாட்ஸ்) வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. ஓராண்டில், ஆயிரக்கணக்கானோருக்கு, இவை வழங்கப்பட உள்ளன.கலர், "டிவி' திட்டத்துக்காவது, ஒரு லைட் அளவிலான கரன்ட் போதும், ஆனால், கிரைண்டர், மிக்சி, மின்விசிறியால், மேலும், 2,000 மெகாவாட் உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிகாரிகளும், நிலைமையை சீரமைக்க, பல்வேறு கட்ட முயற்சி மேற்கொண்டபோதும், நிதி நெருக்கடி, மின் திருட்டு, இலவச மின்சாரம், முறைகேடான இணைப்புகள் மூலம், மின் வாரியத்துக்கு நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

மின்வாரிய உதவி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:காற்றாலை மின் உற்பத்தி, குறைந்து விட்டது. அதனால், காலை, மாலை வேளைகளில் மூன்று மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது. தற்போது மழைக்காலம்; ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உற்பத்தியில் தடை ஏற்பட்டுள்ளது.ஏப்ரல், மே மாதங்களில் நிலைமையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என தெரியவில்லை. அனல் மின் நிலையங்களிலும் உற்பத்தி துவங்கப்படவில்லை. இலவச கிரைண்டர், மிக்சி திட்டம் முழுமையாக அமலுக்கு வரும்போது, மேலும், 1,000 முதல், 2,000 மெகாவாட் மின்சாரம் கட்டாயம் தேவை என்ற நிலை உருவாகும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால், நிலைமையை சமாளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கிரிமினல் வழக்கு:
"விவசாயம், நெசவுத் தொழிலுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர்' என, தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக