ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வானில் இருந்து பார்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளிக்கும் எல்லைக் கோடு



indiaஇந்தியா பாகிஸ்தான் எல்லை வானில் இருந்து பார்க்க மிகவும் அழகாக காட்சி அளிக்கின்றது.
பூமியின் மேற்பரப்பில் நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு வளைந்து வளைந்து செல்லும் இந்தப் பிரகாசமான செம்மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது இந்தக் கோடு.

இந்தக் கோட்டினை கடந்த மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து படம் பிடிக்கப்பட்டது. இதன் இருமருங்கும் காணப்படும் வெளிச்சங்கள் சுறுசுறுப்பான நகரங்களின் வெளிச்சங்களைக் காட்டுகின்றன.
2003 இல் குஜராத் பகுதியிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய அரசால் தீவிரவாதிகளின் ஊடுருவல்களையும் ஆயுதக் கடத்தல்களையும் தடுப்பதற்காக வெளிச்சக்கம்பங்கள் நிறுவப்பட்டன.
மொத்தமாக 1800 மைலில் (2900கி.மீ.) 1248 மைல்களை (2009கி.மீ.) ஒளியூட்டப்போவதாக இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.
இதுவரையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 286 மைல்கள் (460கி.மீ.) நீளத்திற்கு இவ்வெளிச்சங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவை தொடர்ந்தும் 635 மைல்கள் (1022கி.மீ.) ராஜஸ்தானிற்குக் குறுக்காகவும் 109 மைல்கள் ஜம்முவின் சர்வதேச எல்லைக்குக் குறுக்காகவும் 125 மைல்கள் குஜராத் ஊடாகவும் சென்று மொத்தமாக இதுவரையில் 1156 மைல்கள் (1861கி.மீ.) நீண்டு காணப்படுகின்றது.
2012 மார்ச் மாதமளவில் வெளிச்சக் கம்பங்களை நிறுவும் நடவடிக்கை முற்றுமுழுதாக முடிந்துவிடுமென இந்திய அரசாங்கம் நம்புகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக