புதுடெல்லி : டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் காலை 10.17க்கு பலத்த சத்தத்துடன் குண்டுவெடிப்பு நடைபெற்றதில் 9 பேர் உயிரிழந்-துள்ளனர். டெல்லி உயர்நீதிமன்ற 5ம் நுழைவு வளாகத்தில் வெடித்த குண்டால் 45 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்ததாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கான காரணம் குறித்த தகவல் தெரியவில்லை. இந்நிலையில் இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மீட்பு பணிகள் தீவிரம்!
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் போலீசார் தீவிரப் படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்கிறது பதற்றம் - போலீஸ் குவிப்பு!
இந்தியாவின் முக்கிய இடமான டெல்லி உயர்நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குண்டுவெடிப்பிற்கான தடயங்களை சேகரிக்கும் பணியில் குண்டுவெடிப்பு நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக