ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஹீத்றூ விமான நிலையத்தில் பயணிகளை வெட்கங்கொள்ள வைக்கும் புதிய ஸ்கானர்கள்



scan1பிரித்தானியாவில் ஹீத்றூ விமானநிலையத்திலுள்ள ProVision ஸ்கானர்கள் விமான நிலையப் பாதுகாப்பு அலுவலர்களுக்குத் தமது உடையேதுமற்ற நிழலான நிர்வாண உடலைக் காட்டுகின்றதென்று என பயணிகள்  கவலை தெரிவித்துள்ளனர்.
பயணிகளுக்கு முன்னால் நிர்வாணமாக தெரிவதால்  அலுவலகர்கள் சகித்துக் கொண்டு இருப்பதாகவும் தெரியவருகின்றது.

ஆனால் ஸ்கானர்களுக்கான புதிய மென்பொருளானது இந்த அனுபவத்தைக் குறைத்து காட்டூன்களின் வரும் stick-man  ஐப் போல் தோன்றும் உருவங்களில் ஆபத்தான பகுதிகளை மட்டும் மஞ்சள் சதுரங்களால் குறித்துக்காட்ட அவற்றையே ஸ்கான் செய்யும் முறை ஏற்பட்டுள்ளது.
முதன்முறையாக பயணிகளும் பாதுகாப்பதிகாரிகள் பார்ப்பதையே பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
முந்தைய ஸ்கானர்களைப் போலவே இப்புதிய ஸ்கானர்களும் செயற்பட்டாலும் இது பயணிகளின் தேவையற்ற நிர்வாண உடல் தோற்றத்தைப் பெறுவதைத் தவிர்க்கின்றது.
ஹீத்றூ விமான நிலையத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான அதிகாரி, தாங்கள் உச்சபட்சப் பாதுகாப்பை மேற்கொள்ள விரும்புகிறோமே தவிர பயணிகளை அவமானப்படுத்த விரும்பவில்லை என்றும் இப்புதிய ஸ்கானர்கள் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முக்கிய படியாகக் காணப்படுவதாகவும் கூறினார்.
ProVision L3 ஸ்கானர்கள் தாழ்-வலு வானொலி அலைகளையே பயன்படுத்துகின்றன. இவை பயணிகள் வெடிபொருட்கள், ஆயுதங்களை வைத்திருக்கின்றார்களா என்று பரிசோதிப்பதற்கே பயன்படுத்தப்படுகின்றன.
புதிய ஸ்கானர்கள் இன்னும் பாதுகாப்பானவையாகவும் பயணத்தை வேகமாக்குபவையாகவும் வசதியின்மையைக் குறைப்பனவாகவும் உள்ளன. இவை ஒருவரின் முழு உடலையும் ஸ்கான் செய்வதற்குப் பதிலாக அவசியமான பகுதிகளையே பரிசோதிக்கின்றன.
இவை ஒருவரை விசாரிக்கும்போது முகத்தைப் பரிசோதித்து அவர் உண்மையா பொய்யா கூறுகின்றார் என்பதை மூளையின் அதிகரித்த செயற்பாட்டின்மூலம் கணினிக்குக் கொடுக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக