ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இனக் கலவரத்தில் மீண்டும் 18 பேர் சாநைஜீரியவு



   


tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
அபுஜா: நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டது. இதில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரியாவில் முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் கடந்த 10 நாட்களுக்கு முன் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பையும் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர்.
தொடர்ந்து பல முறை கலவரம் ஏற்பட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை இறந்துள்ளனர். இந்நிலையில் நைஜீரியாவின் ஜோஸ்  பகுதியில் ஒரு கும்பல் நேற்றிரவு 9 மணிக்கு புகுந்தது. கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதியில் கும்பல் தாக்குதல் நடத்தியது. பல வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

குரு, மராராபன், ஜகாலியூ ஆகிய கிராமங்களிலும் மர்ம கும்பல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 18 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து உள்ளூர் நிர்வாகத் தலைவர் திமோதி புபா கூறுகையில், ÔÔமர்ம கும்பல் தாக்கியதில் பலர் மரண ஓலம் எழுப்பினர். அந்த சத்தம் கேட்டும் கூட பாதுகாப்புப் படை வீரர்கள் வரவில்லை. வீடுகள் தீயில் எரிவதை பார்த்துக் கொண்டு சும்மா இருந்தனர். இதில் 18 பேர் கொல்லப்பட்டனர்ÕÕ என்றார்.

இந்நிலையில் தாக்குதலை கண்டித்து கிராம மக்கள் பெரும் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். முக்கிய சாலைகளில் மறியல் நடத்தி வருகின்றனர். இந்த இனக் கலவரம் நைஜீரியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளதால் பதற்றம் நீடிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக