ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை: கருணாநிதி


சென்னை: ""மறைந்த பிரதமர் இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை. அவரே வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு தி.மு.க.,வை மக்கள் தாங்கிப் பிடித்தார்கள்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க.,வுக்கு இப்போது வந்துள்ள சோதனைகள் பற்றி பேசப்பட்டுள்ளது. இதையெல்லாம் தாங்கி பழக்கப்பட்ட இயக்கம், தாங்கும் வலிமை கொண்ட இயக்கம்
என்பதை, அன்பழகன் சுட்டிக்காட்டினார். நெருக்கடி காலக் கொடுமைகளை விடவா, சோதனை வந்து விடப்போகிறது! நெருக்கடி நிலைக்கு காரணமான, இந்தியாவின் தலைசிறந்த தலைவியான, இந்திராவாலேயே தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை. "நடந்த காரியங்களுக்காக நான் வருந்துகிறேன்' என, அவரே வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு திராவிட மக்கள், தமிழ் மக்கள் தி.மு.க.,வை தாங்கிப்பிடித்தனர்.

அந்த வரலாறு மீண்டும் திரும்ப, இன்றைய ஆட்சியாளர்கள் வழி வகுத்தால், அதற்காக நன்றி கூற நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜனநாயகத்தை தமிழக சட்டசபையில் காண முடிகிறதா என்றால் இல்லை, ஜனநாயகம் சட்டசபையில் தேடும் பொருளாகி விட்டது. அதனால் தான், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு சென்று, சபாநாயகர், திருக்குறளை படித்து முடித்ததும், வெளியேறினர். அவர்கள் நிருபர்களிடம், "நல்ல சொற்களை கேட்டு முடித்து விட்டோம்; தீய சொற்களை கேட்க நாங்கள் தயாராக இல்லை' என, கூறினர். திருக்குறளை தவிர, காதால் கேட்கும் எந்த சொல்லும், தமிழக சட்டசபையில் ஒலிக்கவில்லை என்பதற்கு இதுவே சான்று. தி.மு.க.,வை பொறுத்தவரை, ஆளுங்கட்சியாக இருந்தபோது, எந்த அளவிற்கு கண்ணியமாக, நாகரிகமாக, எதிர்க்கட்சிகளை மதிக்கும் வகையில் நடந்துகொண்டோம் என்பதை, இன்றைய ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஒரு பெரிய மேதாவி, சட்டசபையில் இவருக்குத்தான் தெரியுமென்று மண்வெட்டிக்கதை சொல்லியிருக்கிறார். தங்க மண்வெட்டி தேடியோர் யார்? முதலில், இரண்டு கோடி ரூபாய் சொத்தை, 66 கோடி ரூபாயாக்கி, இன்றைக்கு பெங்களூரு கோர்ட்டில் தொங்கி கொண்டிருப்பவர் யார்? என்பதை, கதை சொல்வோர் எண்ணிப் பார்க்க வேண்டும். சட்டசபையில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? தி.மு.க., தலைவர்கள் சட்டசபைக்குள் வந்து, இந்த பேச்சை கேட்க தயாராக இல்லை. காதில் பஞ்சை வைத்துக் கொண்டுதான், சட்ட சபைக்குள் வரவேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக