கடாபி எங்கே என்ற குழப்பங்களை மேலும் அதிகரிக்க வைக்க, புதிய ஆடியோ ஒலிப்பதிவு ஒன்று நேற்று (வியாழக்கிழமை) வெளியாகியுள்ளது. இந்த ஒலிப்பதிவில் ஒலிப்பது கடாபியின் குரல்தான் என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
“நான் நாட்டைவிட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகள் பொய்யானவை. நான் இன்னமும் லிபியாவுக்கு உள்ளேதான் இருக்கிறேன்” என்று இந்த ஒலிப்பதிவில் கூறப்பட்டுள்ளது. சிரியாவிலிருந்து ஒளிபரப்பாகும் ‘அராய் டி.வி.’ என்ற தனியார் சேனல் கடாபியின் செய்தியை இன்று ஒலிபரப்புச் செய்தது. இதே டி.வி. நேனல்தான், இதற்குமுன்னரும் கடாபியின் ஒலிப்பதிவுகளை வெளியிட்டிருந்தது.
கடாபிக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிப் படைகளின் தளபதிகளில் ஒருவர், “கடாபியை சகாராவுக்குள் சுற்றி வளைத்து விட்டோம். எந்த நிமிடத்திலும் அவர் எம்மால் உயிருடன் கைப்பற்றப்படலாம், அல்லது கொல்லப்படலாம்” என்று நேற்று காலையில் பேட்டி அளித்திருந்தார்.
அவரது பேட்டி வெளியாகிய சிறிது நேரத்தில், போராளிப் படையின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த ஒருவர், தலைநகர் ட்ரிபோலியில் இருந்து அதற்கு முற்றிலும் நேர்மாறான பேட்டி ஒன்றைக் கொடுத்தார். “கடாபியின் தற்போதைய மறைவிடம் எதுவென்று எம்மால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் எந்தவொரு யுத்த முனையிலும் நேரில் தோன்றவில்லை”
ஒரே தரப்பின் இரு வெவ்வேறான செய்திகள் ஏற்படுத்திய குழப்பத்தை, மேலும் அதிகரிக்க வைத்துள்ளது கடாபியின் ஒலிப்பதிவு.
“நாம் எமது தாய் மண்ணைவிட்டு எங்கும் செல்லப் போவதில்லை. எமது அரசின் முக்கியஸ்தர்கள் சிலர், ராணுவ வாகனத் தொடர் அணியில் நாட்டைவிட்டு வெளியேறி நைகர் நாட்டுக்குள் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது சாதாரணமாக நடைபெறும் விஷயம்தான்.
எமது அதிகாரிகளும், ராணுவத் தளபதிகளும் நைகர் நாட்டுக்கு அவ்வப்போது சென்று திரும்புவது சகஜமாக நடப்பதுதான். பாதுகாப்பு காரணமாக அவர்கள் ராணுவத் தொடர் அணியுடன் சென்றிருப்பார்கள். அதற்காக அவர்கள் நாட்டை விட்டு தப்பி ஓடியதாக அர்த்தம் கிடையாது” என்றும் அவரது ஆடியோ செய்தியில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக