ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

1800 ஏக்கரில் பிரமாண்ட ஸ்பேஸ் போர்ட்! (காணொளி பட இணைப்பு)



விண்வெளிக்கு மனிதர்களை சுற்றுலா அழைத்துப் போவதற்கான ஏற்பாடுகள் அமெரிக்காவில் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விண்கலங்கள் புறப்பட்டு செல்வதற்கான ஸ்பேஸ் போர்ட் அமைக்கும் வேலை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.


இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டது வர்ஜின் குழுமம். இது விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதற்காக ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற தனி நிறுவனத்தை தொடங்கியிருக்கிறது.

விண்வெளி சுற்றுலா திட்டம் 2013-ல் தொடங்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் வர்ஜின் கேலக்டிக் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் உள்ள லாஸ் க்ரூசஸ் பகுதியில் பிரமாண்ட ‘ஸ்பேஸ் போர்ட்’ அமைக்கப்பட்டு வருகிறது.



1800 ஏக்கர் பரப்பில் பிரமாண்டமாக ஸ்பேஸ் போர்ட் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இதுபற்றி ஸ்பேஸ் போர்ட் அதிகாரிகள் கூறியதாவது: விண்கலங்கள் புறப்படும் இடம் என்பதால் 3 கி.மீ. நீள ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா செல்லும் விண்கலத்துடனான தொடர்பை தொடர்ந்து கண்காணிக்கும் தரை கட்டுப்பாட்டு மையமும் இந்த வளாகத்தில் அமைக்கப்படுகிறது.



இந்த பணிகள் இந்த ஆண்டு கடைசிக்குள் முடிந்துவிடும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 2013-ல் விண்வெளி சுற்றுலா திட்டம் தொடங்கப்படும். சுற்றுலா வாகனம் ‘ஸ்பேஸ்ஷிப்-2’ சோதனை பலகட்டமாக நடந்து வருகிறது.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக