லண்டன்: என்னை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல உங்களது தனி விமானத்தை லண்டனுக்கு அனுப்பி வையுங்கள் என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதிக்கு விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஞ் பதிலடி தந்துள்ளார்.
மாயாவதியின் ஆடம்பரம், அதிகார துஷ்பிரயோகம், உயிர் பயம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக டெல்லி அமெரிக்கத் தூதரகம் தனது தலைமையகத்துக்கு அனுப்பிய ரகசிய கேபிள்களை சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
அதில், புதிய செருப்பு வாங்குவதற்காக உத்தரப் பிரதேச அரசுக்குச் சொந்தமான விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தார் மாயாவதி என்ற விவரம் இடம் பெற்றிருந்தது.
ஆனால், இதை மாயாவதி மறுத்தார். அசான்ஞ்சேவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மன நல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மனநல மையத்தில் சேர்த்துவிடத் தயாராக இருப்பதாகவும் மாயாவதி கூறியிருந்தார்.
இந்நிலையில் மாயாவதியின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அசான்ஞ். அவர் கூறுகையில், மாயாவதி தனது தவறுகளை ஒப்புக் கொள்ள வேண்டும், திருந்த முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு பகுத்தறிவுக்குப் பொறுந்தாமல் பேசக் கூடாது. தனது பேச்சுக்கு முதலில் மன்னிப்பு கோர வேண்டும்
வேண்டுமானால், என்னை இந்தியாவுக்குக் கொண்டு செல்ல தனது தனி விமானத்தை மாயாவதி லண்டனுக்கு அனுப்பி வைக்கலாம். நான் மிக அதிகமாக நேசிக்கும் இந்தியாவில் அரசியல் அடைக்கலம் பெறக் கூட தயார். மாயாவதிக்கு இங்கிலாந்திருந்து நல்ல செருப்புகளையும் வாங்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக