ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

டில்லி குண்டுவெடிப்பில், ‘இந்த விஷயம்’ தெரியுமா உங்களுக்கு





உயர்நீதிமன்றத்தின் 5ம் வாயிலில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற குண்டுவெடிப்புக்கு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பினர் உரிமை கோரியுள்ள போதிலும், அவர்கள்தான் இந்தத் தாக்குதலைச் செய்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது என உட்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது
.
தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் எஸ்.ஜி.சின்ஹா, அதுபற்றி இந்திய உட்துறை அமைச்சின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார். “அந்த அமைப்பினர் குண்டு வெடிப்புக்கு உரிமைகோரி அனுப்பிய இ-மெயிலை ஆராய்ந்து வருகிறோம். எமது ஆய்வுகளில், குண்டை வெடிக்க வைத்தது அந்த அமைப்பினர்தான் என்று கண்டுபிடிக்கப்படும்வரை, எதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை” என்பது அவரது கூற்று.
harkatuljihadi2011@gmail.com என்ற இ-மெயில் ஐடியில் இருந்தே உரிமை கோரல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இ-மெயில் எந்த இடத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதை 20 அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழுவினர் ட்ராக் டவுன் பண்ணிவிட்டனர்.
ஜம்முவிலுள்ள கிஷ்ட்வார் மாவட்ட இன்டர்நெட் மையம் ஒன்றிலிருந்து குண்டுவெடிப்புக்கு உரிமைகோரல் இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. மையத்தின் உரிமையாளர் விசாரிக்கப்பட்டுள்ளார். மேலதிக விபரங்கள் ஏதும் இன்னமும் தெரியவரவில்லை.
“இதுவரை எமது ஆய்வுகளில், சூட்கேஸில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. நன்கு திட்டமிட்டே இந்த குண்டுவெடிப்பை, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமுள்ள இந்தப் பகுதியில் நிகழ்த்தியுள்ளார்கள் என்பதும் தெரிகின்றது.
திட்டமிடலுக்காக அவர்கள் இந்தப் பகுதியில் ஏற்கனவே நடமாடி, பாதுகாப்பு ஏற்பாடுகளை நோட்டமிட்டு இருப்பார்கள் என்றும் கூறமுடியும். அதைத் தவிர, உறுதிப்படுத்தக்கூடிய வேறு தகவல்கள் ஏதும், தற்போது எம்மிடம் கிடையாது.” என்றும் கூறியிருக்கிறார் அவர்.
இவர் இப்படிச் சொல்வதன் காரணம், உயர்நீதிமன்றத்தின் 5ம் வாயிலில் பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பது குண்டு வைத்தவர்களுக்கு நன்கு தெரிந்துள்ளது. அத்துடன், இந்த கேட்டில் உள்ள மெட்டல் டிட்டெக்டர்களும் கடந்த சில நாட்களாகவே பழுதடைந்த நிலையில் உள்ள விஷயத்தையும் அவர்கள் அறிந்து கோண்டே, இந்த இடத்தை குண்டு வைப்பதற்கு தேர்ந்தெடுத்துள்ளனர்.
தாக்குதலை நடாத்துவதற்கு ஒரு புதன் கிழமையைத் தேர்ந்தெடுத்ததிலும், கவனமான திட்டமிடல் இருந்துள்ளது. காரணம், மற்றைய நாட்களைவிட, புதன் கிழமைகளில்தான் 5ம் வாயிலில் ஜன நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
இதைத் தவிர, புதன் கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சென்டிமென்டலாக மற்றொரு காரணமும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. மூன்று மாதங்களுக்கு முன்னரும் (மே 25ம் தேதி) டில்லி ஹைகோர்ட்டில் குண்டுவெடித்தது. அதுவும் ஒரு புதன் கிழமை. ஜூலை 13ம் தேதி மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடைபெற்றதல்லவா? அதுவும் ஒரு புதன்கிழமைதான். அதற்குமுன், உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்ததும் ஒரு புதன்கிழமையே!
குண்டுவெடிப்புக்கு ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பு உரிமை கோரிய பின்னரும், அதை உட்துறை அமைச்சு உறுதிப்படுத்தாமல் இருப்பதற்கு சில காரணங்கள் உள்ளன.
கடந்த 4 வருடங்களாக இந்த இயக்கம் இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கோண்டுள்ள போதிலும், அதை இந்திய அதிகாரிகள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இதற்கு, உட்துறை அமைச்சின் ‘ஏதோ ஒரு’ கொள்கை ரீதியான காரணம் இருக்கலாம். குறிப்பிட்ட இயக்கம் இந்தியாவில் இயங்குவதை சில காரணங்களுக்காக அவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாமல் இருக்கலாம்.
ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி அமைப்பின் கடந்தகாலச் செயற்பாடுகளைப் பாருங்கள், அதில் ஏதாவது ஒரு தாக்குதலுக்கு இந்த அமைப்புத்தான் காரணம் என மத்திய அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறதா என்பதையும் பாருங்கள்:
• 2007 ஆகஸ்ட் 25ல், ஹைதராபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு – ஹர்கத்-உல்-ஜிகாத்-அல்-இஸ்லாமி இயக்கம்தான் சந்தேக லிஸ்டில் உள்ளது. ஆனால், இன்னமும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை!
• 2008 மே 13ல், ஜெய்பூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு – இதே இயக்கம்தான் செய்ததாக சந்தேகம். ஆதாரங்கள் இல்லாததால் நிரூபிக்கப்படவில்லை.
• 2008 ஜூலை 25ல், பங்களுருவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் – இதே இயக்கம்தான் நடாத்தியது. இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.
• 2008 ஜூலை 26ல், அஹ்மதாபாத் தொடர் குண்டு வெடிப்புகள் – இதே இயக்கத்தின் கைவரிசைதான். இன்னமும் நிரூபிக்கப்படவில்லை.
• 2008 செப்டெம்பர் 13ல், டில்லி தொடர் குண்டு வெடிப்புகள். – இதே இயக்கம்தான். ஆதாரங்கள்? டில்லி போலிஸ் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
• 2008 அக்டோபர் 1ல், திரிபுரா அகர்தாலா குண்டு வெடிப்பு – இதே இயக்கம் உரிமை கோரியது. ஆனால், நிரூபின்ன ஆதாரம் கிடையாது.
• 2008 அக்டோபர் 30ல், அசாம் குண்டு வெடிப்புகள் – இதே இயக்கம் ஒரே நாளில் நான்கு இடங்களில் (குவாஹட்டி, பார்பேடா, காக்ராஜ்கர், பாங்கைகான்) குண்டு வைத்தது. ஆதாரமா? இன்னமும் கிடைக்கலிங்க.
இப்போது டில்லி குண்டு வெடிப்புக்கும் இதே இயக்கம் உரிமை கோரியுள்ளது. இந்த இயக்கத்தினர்தான் குண்டு வைத்தார்கள் என்பது நிரூபிக்கப்படும் என்று நீங்கள் நம்பினால், உங்களுக்கு அருமையான ஊகத் திறமை உள்ளது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக