ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உள்துறை அமைச்சராக 33 மாத பதவிக்காலத்தில் 7 குண்டுவெடிப்புகளை சந்தித்த ப.சிதம்பரம்

P Chidambaramடெல்லி: உள்துறை அமைச்சராக பதவியேற்று 33 மாத காலத்தை கடந்துள்ள ப.சிதம்பரம், இதுவரை 7 குண்டுவெடிப்புகளை சந்தித்துள்ளார். 
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மொத்தம் 7 பெரிய குண்டுவெடிப்புகளை சந்தித்துள்ளது இந்தியா. இதில் ஆறு குண்டுவெடிப்புகளில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை, எந்தத் துப்பும் துலங்கவில்லை. இவை அத்தனையும் ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சர் பதவிக்காலத்தில் நடந்துள்ளதால் அவருக்குப் பெரும் தர்மசங்கடமாகியுள்ளது.



மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த மிகப் பயங்கரமான 3 நாள் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் உள்துறை அமைச்சரானார் ப.சிதம்பரம். அதன் பின்னர் பெங்களூர், டெல்லி, மும்பை, புனே, வாரணாசி ஆகிய நகரங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் மும்பை, டெல்லி, புனே ஆகிய நகரங்களில் மிகப் பெரிய சம்பவங்கள் நடந்துள்ளன.

உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் ப.சிதம்பரம். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். சொன்னபடி பல ஆக்கப்பூர்வமான பணிகளையும் அவர் மேற்கொண்டார். இதனால் முன்பு போல அதிக அளவிலான தீவிரவாதத் தாக்குதல்களை நாடு சந்திக்கவில்லை. ஆனால் நடந்து விட்ட 7 தீவிரவாத தாக்குதல் சம்பவங்களும் இந்திய மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன. அதை விட முக்கியமாக இதில் யாருமே கைது செய்யப்படாததுதான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில் புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்புச் சம்பவத்தில்தான் மிர்ஸா ஹிம்மாயத் இனாயத் பேக் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்து 7 மாதங்களுக்குப் பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 6 பேர் தேடப்பட்டு வருகின்றனர். இவர்கள் இதுவரை சிக்காமல் நழுவிக் கொண்டிருக்கிறார்கள். பேக் மீது மட்டும் வழக்கு நிலுவையில் உள்ளது.

இதுதவிர 2010, ஏப்ரல் 17ல் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிபப்பு, 2010 டிசம்பர் 7ல் வாரணாசியில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

அதேபோல டெல்லி உயர்நீதிமன்றத்தின் 7வது நுழைவாயிலில் கடந்த மே 25ம் தேதி நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்களும் இதுவரை பிடிபடவில்லை.

இதேபோல 2010 மார்ச் 29ல் மெஹ்ராலியில் நடந்த குண்டுவெடிப்பு, 2010 செப்டம்பரில் ஜம்மா மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பு ஆகியவற்றில் தொடர்புடையவர்களும் இதுவரை சிக்கவில்லை.

2011, ஜூலை 13ல் மும்பையில் மூன்று இடங்களில் நடந்த பெரும் குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்தும் இதுவரை துப்பு கிடைக்கவில்லை. இந்தநிலையில்தான் டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக