ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வேலைவாய்ப்பை தரும் டிப்ளமோ படிப்புகள்



பள்ளிப்படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பதையே விரும்புகின்றனர். ஆனால் இன்ஜினியரிங் மாணவர்களை விட, டிப்ளமோ முடித்தவர்களுக்கு நிறுவனங்கள், வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கின்றன. இதற்கு காரணம் இன்ஜினியரிங் மாணவர் செய்யும் வேலையை, நிறுவனங்கள் டிப்ளமோ மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பணியமர்த்துகின்றனர். பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகள் மற்றும் ஒரு வருட சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இதில் வேலைவாய்ப்புள்ள படிப்புகளை தேர்வு செய்து படித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
டிப்ளமோ படிப்புகள்
* ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் (Automobile Engineering)
வாகனங்களின் செயல் திறனை பற்றிய டிப்ளமோ படிப்பு மாணவர்களுக்கு உலகளவில் வேலைவாய்ப்பை பெற்று தருகிறது. இந்த படிப்பு, இந்நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தொழில் திறன், தொழில்நுட்ப நுணுக்கங்கள் முதலியவற்றில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறது.

* கட்டடக் கலை (Civil Engineering)
கட்டடங்கள், அணைகள், பாலங்கள் முதலியவற்றை வடிவமைத்து, கட்டுமானப்பணியில் ஈடுபடுவதற்கான இன்ஜினியரிங் படிப்பை கற்றுத்தருகிறது. ரோடு அமைத்தல், விமான நிலையங்கள் பராமரிப்பு, துறைமுகம் வளர்ச்சி பணி, உயர்ந்த கட்டடங்களை வடிவமைப்பது, பாலங்கள், பாதாள சாக்கடை அமைத்தல், நீர் கழிவை அகற்றி சுற்றுப்புற சூழலை பாதுகாத்தல் முதலிய பணிகளிலும் நவீன கட்டடக் கலை நுட்பங்கள் பயன்படுகின்றன. 

* கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் (Computer Technology)கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது. இந்தியா, தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சியில் முதலிடம் வகிப்பது கம்ப்யூட்டர் துறை. இதனால் இந்த கோர்ஸ் முடிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு உடனடியாக உள்ளது.
* எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் (Electronics and Communication Engineering) எலக்ரானிக்ஸ் பயன்பாடு, மருத்துவமனையில் நோயை கண்டுபிடிக்க உதவும் கருவியில் ஆரம்பித்து தகவல் தொழில் நுட்பம் வரை அனைத்து துறையிலும் பரவியுள்ளது. கம்ப்யூட்டர் தொழில் நுட்பம், தொலைதொடர்பு, கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் போன்றவை வளர்ச்சியின் உச்சத்தில் உள்ளன. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பு, மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை வழங்கும்.
* எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் (Electricals and Electronics Engineering)தொழிற்சாலைகள் பெருகி வரும் சூழ்நிலையில் எலக்ட்ரிகள் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் படிப்பு, வேலைவாய்ப்பு அதிகம் உள்ள துறை. இந்த பிரிவு 100 ஆண்டுகளில் வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. மின் சாதனமான ஜெனரேட்டர் முதல் சிறிய கம்ப்யூட்டர் சிப்புகள் வரை இது முக்கிய இடத்தை பெறுகிறது.
* இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ட்ரோல் இன்ஜினியரிங் (Instrumentation and Control Engineering)இன்ஸ்ட்ருமென்டேஷன் என்பது இன்டர்நெட் பயன்பாட்டில் நெட்வொர்க் இணைப்புகளை கட்டுப்படுத்தி தகவல்களை சேகரிக்க எழுதப்படும் புரோக்ராம் கோட் தொடர்பான படிப்பாகும். கன்ட்ரோல் இன்ஜினியரிங் என்பது, கம்ப்யூட்டர் மூலம் வெவ்வேறு செயல்பாடுகளை, கணித அடிப்படையில் கட்டுப்படுத்துவது தொடர்பான படிப்பாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக