ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சுந்தர் சி இயக்கும் படத்தில் மறுபடியும் வடிவேலு




சிலபேர்  இடியே விழுந்தாலும் எதற்கும் பின்வாங்கிப் பதுங்க மாட்டார்கள்! அப்படியொரு ஆள்தான் இயக்குனர் நடிகர் சுந்தர்.சி.
இவர் இயக்கத்தை கைவிட்டு நடிகராக களமிரங்கிய படங்களில் ‘தலைநகரம்’ என்ற ஒரு படத்தை தவிர வேறு  எந்த படமும் போனியாக வில்லை.


கடைசியாக இவர் நடித்த முரட்டுக் காளை படத்தை யாரும் வாங்க முன் வராததால் படம் தயாரகியும் இன்னும் பெட்டிக்குள்ளேயே இருகிறது.

ஆனால் இதற்கெல்லாம் என்றைக்குமே கலங்கியதில்லை சுந்தர்.சி.

கலைஞர் டிவியில் ஒரு பக்கம் பாக்கியராஜுடன் இணைந்து ‘நாளைய இயக்குனர் நிகழ்சியை ‘ தொகுத்து வழங்குகிறார். இன்னோரு பக்கம், மனைவி குஷ்பூ இழுத்துக்கொண்டு வரும் வழக்குகள் பிரச்சனைகளை கவனமாக பார்த்துக் கொள்கிறார்.

ஆனால் இனி நடிப்பு மட்டும் வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டாராம் சுந்தர். சி. இதனால் இயகத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்.

ஒரு இயகுனராக உள்ளத்தை அள்ளித்தா, கிரி உட்பட  பல கமர்ஷியல் ஹிட் படங்களை இயக்கியவர் சுந்தர்.சி.

கமல் நடிப்பில் ‘அன்பே சிவம் படத்தை இயக்கி பெருமை தேடிக்கொண்டார். தற்போது மீண்டும் இயக்கம் என்று வந்தபிறகு ஹீரோக்க்கள் கால்ஷீட் கொடுக்க வேண்டுமே!? அந்த புண்ணியத்தை கட்டிக்கொண்டிருகிறார்கள் விமல், மிர்ச்சி சிவா இருவரும் .
சுந்தர் .சி இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.  இதை விட ஹாட்டான நியூஸ் இந்தப் படத்தில் வடிவேலும் மீண்டும் தனது இன்னிங்ஸை தொடங்குகிறார். ஆஹா வந்துட்டாரய்யா!

1 கருத்து:

  1. இவ்வளவு அழகாக இதனைக் காப்பி பேஸ்ட் பண்ணிய நீங்கள் இச் செய்தி பெறப்பட்ட தளத்தின் பெயரைக் குறிப்பிட்டிருக்கலாமே.
    http://www.4tamilmedia.com/cinema/cinenews/771-2011-09-24-16-43-48

    பதிலளிநீக்கு