பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குரு, உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் அவனுக்கு தண்டனை அளிக்கலாம் என, ஹுரியத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக, விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.
பார்லிமென்ட் மீது, 2001, டிசம்பரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி அப்சல் குருவுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜிவ் கொலையாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகனுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை குறைக்க வேண்டும் என, தமிழக சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியது.
"அப்சல் குருவுக்கு மரண தண்டனையை குறைக்கக் கோரி காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் இயற்றினால் சும்மா இருப்பார்களா?' என. அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தன் இணைய தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. காஷ்மீரில் உள்ள ஹுரியத் மாநாட்டு அமைப்பு தலைவர்களில் ஒருவரான மிர்வைஸ் உமர் பருக், அப்சல் குருவுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் தெரிவித்துள்ளது.
"அப்சல் குரு உண்மையிலேயே குற்றம் செய்திருந்தால் அவனுக்கு மரண தண்டனை அளிக்கலாம்' என, மிதவாத போக்குடைய ஹுரியத் தலைவர்கள் தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக