ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வீரபாண்டி ஆறுமுகம் மீது 4வது புது வழக்கு!: மீண்டும் கைது!!

 
நிலம் அபகரிக்க முயன்றதாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது 4வதாக இன்னொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறையில் இருக்கும் அவர் இந்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்படவுள்ளதால், மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைத்தாலும் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


வீரபாண்டி ஆறுமுகம் மீது ஏற்கனவே சேலம் அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு வழக்கு, சேலம் 5 ரோடு பிரிமியர் மில் நில அபரிப்பு வழக்கு, சேலம் தாசநாய்க்கன்பட்டி நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன. இதில் அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் வீரபாண்டி ஆறுமுகத்தை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க கடந்த 30ம் தேதி உத்தரவிட்டனர். ஆனால் அதைத் தொடர்ந்து நீதிமன்றங்களுக்கு ஒரு வாரம் விடுமுறை என்பதால் அவர் உடனடியாக விடுதலையாக இயலவில்லை. விடுமுறைக்குப் பின் இன்று தான் நீதிமன்றம் திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் வெளியே வர அவரது வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டிருந்தனர்.

இதை மாஜிஸ்திரேட் விசாரித்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வீரபாண்டி ஆறுமுகம் ஜாமீனில் செல்ல இன்று உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வந்தது புது வழக்கு!:

இந் நிலையில் சேலம் அங்கம்மாள் காலனி அருகில், புதிய பேருந்து நிலையத்துக்கு அருகே, கோயம்பத்தூர் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்தி வரும் பிரேம்நாத் என்பவர் சேலம் மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் கொடுத்தார்,

அதில், சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில், கோயம்பத்தூர் ஜூவல்லர்ஸ் பெயரில் 2,100 சதுர அடியில் இடம் உள்ளது. இந்த இடத்தை மிரட்டி தங்களுக்கு வேண்டும் என்று சொல்லி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவரது மகன் ராஜா என்கிற ராஜேந்திரன், வீரபாண்டி ஆறுமுகத்தின் உதவியாளர் சேகர் மற்றும் திமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பாரப்பட்டி சுரேஷ் குமார், கவுசிக பூபதி, முன்னாள் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், மாநகராட்சி கவுன்சிலர் ஜிம் ராமு, முன்னாள் சேலம் தாசில்தார் ரங்கநாதன் (இவர் தற்போது வீரபாண்டி ஆறுமுகம் நடத்தும் கல்லூரியின் தாளாளர்), அப்போதைய சேலம் ஆர்டிஓ பாலகுருமூர்த்தி மற்றும் அழகாபுரம் ஜான், பிரகாஷ், சரவணன், முரளி ஆகியோர் எங்களை மிரட்டினர்.

இதுதொடர்பாக 2007ம் ஆண்டு சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், இப்போது மீண்டும் புகார் கொடுத்துள்ளேன் என்று கூறியிருந்தார் பிரேம்நாத்.

இதையடுத்து 16 பேர் மீதும் புகாரைப் பதிவு செய்த சேலம் குற்றப்பிரிவு போலீசார், முன்னாள் ஆர்டிஓ பாலகுருமூர்த்தி, முன்னாள் தாசில்தார் ரங்கநாதன், அழகாபுரம் ஜான், அழகாபுரம் முரளி உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்து, சேலம் நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த புதிய வழக்கில் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் இருந்து பிடிவாரண்டு பெறப்பட்டு, சேலம் நீதிமன்றத்தில் தரப்படும். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளதற்கான உத்தரவை கோவை மத்திய சிறை அதிகாரிகளிடம் சேலம் போலீசார் தருவார்கள். இதனால் வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாக முடியாது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறுமுகத்தின் மகன் ராஜா தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த ஒரு மாதமாக சிறையில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்துக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக