ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தவறு செய்தால் இதுதான் கதி ஜனார்த்தன ரெட்டி கைது மற்றவர்களுக்கு பாடம்

புதுடெல்லி : ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளது உயர் பதவிகளில் இருக்கும் மற்றவர்களுக்கு பாடமாகும். தவறு செய்திருந்தால் ஜனார்த்தன் ரெட்டிக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும் என்று மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார். சட்டவிரோத சுரங்க விவகாரத்தில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ நேற்று கைது செய்தது. இது பற்றி பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


மத்திய அமைச்சர் மொய்லி: உயர் பதவியில் இருப்பவர்கள் சட்டத்தை மதிக்காமல் நடந்தால் இதுதான் நடக்கும். தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி. கர்நாடக பா.ஜ. தலைவர் ஈஸ்வரப்பா: காங்கிரசின் நிழலாக சி.பி.ஐ செயல்படுகிறது என்பதை ஜனார்த்தன் ரெட்டி கைது காட்டுகிறது. சிபிஐயை காங்கிரஸ் தவறாக பயன்படுத்துவதை நிரூபிக்க பல ஆதாரங்கள் இருக்கின்றன. ரெட்டி சட்டரீதியாக போராடுவார்.

அவருக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். முன்னாள் லோக் அயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே: சட்டவிரோத சுரங்கங்கள் விவகாரத்தை விசாரிக்க சி.பி.ஐக்கு கர்நாடக அரசு அனுமதி மறுத்தது. ஆனால், ஆந்திரா அரசு அனுமதி அளித்ததன்பேரில் விசாரணை நடத்தி ஜனார்த்தன் ரெட்டியை சி.பி.ஐ கைது செய்துள்ளது. கர்நாடக சட்டவிரோத சுரங்க மோசடி பற்றியும் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு: சட்ட விரோத சுரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 2005ம் ஆண்டு முதல் கோரி வருகிறோம். மோசடி நடந்ததற்கான ஆதாரத்தையும் தந்துள்ளோம். ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டதை வரவேற்கிறேன். கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா: ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ கைது செய்துள்ளதால், அது பற்றிய விவரங்கள் எனக்கு தெரியாது. எனவே, இப்போதைக்கு கருத்து சொல்ல முடியாது. எல்லா தகவலும் தெரிந்தபிறகு கருத்து சொல்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக