ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈரானில் போதைப் பொருள் கடத்திய 5 பேர் தூக்கிலிடப்பட்டனர்


ஈரானில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக குற்றசாட்டப்பட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈரான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சீம்னான் மாகாணத்தில், ஷகரோத் என்ற இடத்தில் சிறைச் சாலை ஒன்று உள்ளது.

இங்கு கைதிகளாக இருந்த 5 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர்கள் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை முடிந்திருந்தது. 5 பேரின் பெயர், வயது உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதைபோல சிறுமி ஒருவரை கொலை செய்த வழக்கில் கைதான குஷா என்பவரை பொது இடத்தில் வைத்து தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரான் நாட்டில், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போலி மருந்து விற்பனை, விபசாரம், கள்ளத் தொடர்பு ஆகிய குற்றங்களை கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இதனால், இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.



கடந்த 9 நாட்களில் மட்டும் 22 பேரை ஈரான் அரசு தூக்கில் போட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலரும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட காத்திருப்பதாக தெரிகிறது.

கடந்தாண்டு இதேபோல 179 பேருக்கும், இந்தாண்டு இதுவரை 192 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருப்பதாக, அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக