ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் பலி!



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரம்பான் மாவட்டத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது

ரம்பான் மாவட்டத்திலிருந்து பானிஹர் என்ற இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை வழியாக போய்க்கொண்டிருந்தது. அப்போது கூனி நாலா என்ற இடத்திற்கு அருகே அந்த பேருந்து வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள 400 அடி பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது.




இதில் அந்த பேருந்தில் பயணித்த 16 பேர் பலி 23 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவலறிந்ததும் காவல்துறையினரும், பாதுகாப்பு படையினரும் அந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக