ராலேகான் சித்தி (மகாராஷ்டிரா): "ஊழலுக்கு எதிராக, ரத யாத்திரை நடத்தப் போவதாக அத்வானி அறிவித்துள்ளது, ஏமாற்று வேலை' என, காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக, 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காந்தியவாதி அன்னா ஹசாரே, தன் சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ராலேகான் சித்தியில், தனியார் "டிவி' க்கு அளித்த பேட்டி: ஊழலுக்கு எதிராக, ரத யாத்திரை நடத்தப் போவதாக, பா.ஜ., தலைவர் அத்வானி அறிவித்துள்ளார். இது, ஏமாற்று வேலை. உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என,
அத்வானி விரும்பினால், பா.ஜ., ஆளும் மாநிலங்களில், லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த, அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவுக்கு, பார்லிமென்டில், தன் முழு ஆதரவையும் தெரிவிக்க வேண்டும். நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோர், லோக்பால் மசோதாவை உருவாக்கும் கூட்டுக் குழுவில் அங்கம் வகித்தனர். இவர்கள் மூன்று பேரும், தங்களை பிரதமர் போல் கருதி, நடந்து கொண்டனர். பா.ஜ., காங்கிரஸ் கட்சிகளைச் சேராத, ஊழல் இல்லாத மற்ற கட்சிகளுக்கு, என் ஆதரவை தெரிவிப்பேன். அதற்காக, அந்தக் கட்சிகளை வழிநடத்த மாட்டேன். கடந்த மாதம் 16ம் தேதி, டில்லியில் உண்ணாவிரதம் இருக்கச் சென்ற என்னை, போலீசார் கைது செய்தனர். இந்த கைது சம்பவத்துக்கு முக்கியக் காரணமாக இருந்தவர், உள்துறை அமைச்சர் சிதம்பரம். திகார் சிறையில் இருந்து, என்னை மகாராஷ்டிராவுக்கு கொண்டு செல்வதற்கு, விமானம் தயாராக இருந்தது. ஆனால், சிதம்பரத்தின் திட்டம், அவர்களின் அரசாங்கத்துக்கு எதிராகவே, திரும்பி விட்டது. பிரதமர் மன்மோகன் சிங், நல்ல மனிதர். ஆனால், அவரால் திறமையாகச் செயல்பட முடியவில்லை. மூத்த அமைச்சர்கள், பின்னணியில் இருந்து அவரை இயக்குவது தான், இதற்குக் காரணம்.
எங்களின் கோரிக்கைகளை, பார்லிமென்ட் நிலைக் குழு நிறைவேற்றாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்துவேன். எம்.பி.,க்களின் வீடுகளின் முன், பஜனை பாடல்களைப் பாடி, போராட்டம் நடத்துவோம். ஊழலுக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தும்போதெல்லாம், அரசியல் கட்சிகளுடன் எங்களைத் தொடர்புபடுத்திக் கூறுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எங்களின் போராட்டத்துக்கும், அரசியல் கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வாறு, அன்னா ஹசாரே கூறினார்.
ஹசாரே ஆதரவை கோரவில்லை: பா.ஜ., விளக்கம் : அத்வானியின் ஊழலுக்கு எதிரான ரத யாத்திரை திட்டத்துக்கு ஹசாரேவின் ஆதரவை கோரவில்லை என, பாரதிய ஜனதா தெரிவித்துள்ளது. பா.ஜ., தலைவர் அத்வானி, ஊழலுக்கு எதிராக அடுத்த மாதம் ரதயாத்திரை நடத்த உள்ளார். "அத்வானியின் ரதயாத்திரை போலியானது' என, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இது குறித்து பா.ஜ., தகவல் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கார் குறிப்பிடுகையில், "ரத யாத்திரையை பற்றி கருத்து சொல்வதற்கு ஹசாரேவுக்கு உரிமை உள்ளது. ரத யாத்திரைக்கு மக்கள் ஆதரவளிப்பதும் ஆதரவளிக்காததும் அவரவர் விருப்பம். ஆனால், நாங்கள் அத்வானியின் ரத யாத்திரைக்கு ஆதரவளிக்கும் படி ஹசாரேவை கேட்கவில்லை. அன்னா ஹசாரே உள்ளிட்ட பலரது ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு பா.ஜ., ஆதரவு தெரிவித்துள்ளது. ஊழலற்ற இந்தியாவை உருவாக்கும் நோக்கோடு தான் அத்வானி ரதயாத்திரை நடத்துகிறார்' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக