ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரதமருடன் வைகோ நேரில் சந்திப்பு: மூன்று கோரிக்கைகளை விடுத்தார்





பிரதமர் மன்மோகன் சிங்கை ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ இன்று நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது பிரதமரிடம் அவர் 3 கோரிக்கைகளை விடுத்ததாக அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று நண்பகல் 12.20 மணி முதல் 12.40 மணி வரையிலும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கின்ற பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி உடன் இருந்தார். பிரதமரிடம் வைகோ மூன்று கோரிக்கைகள் விடுத்தார்.
முல்லைப் பெரியாறு: கேரள அரசு கட்டத் திட்டமிட்டு உள்ள புதிய அணையில் இருந்து ஒரு சொட்டுத்தண்ணீர் கூடத் தமிழகத்துக்குக் கொடுக்க மாட்டார்கள்.
தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். இரண்டு மாநிலங்களுக்கும் நல்லது அல்ல. இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராகவே போகும். முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள தூக்குத் தண்டனையை ரத்துச் செய்ய வேண்டும்.
இரண்டு பற்றிரி செல்களை வாங்கிக் கொடுத்தார் என்பது தான் அவர் மீதான குற்றச்சாட்டு. ஏற்கனவே நளினிக்கு மரண தண்டனையை ரத்துச் செய்து உள்ளீர்கள். அதுபோல பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்.
ஈழத்தமிழர் பிரச்சினை: லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டு உள்ள அனைத்து பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதமரை வைகோ கேட்டுக்கொண்டதாக ம.தி.மு.க வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக