ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சுவிஸ் வங்கியில் பணம் உள்ள இந்தியர்களின் லிஸ்ட்டில், ஒரு ட்ரிக்!





புதுடில்லி, இந்தியா: ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தீபோல பரவத் தொடங்கியுள்ள நிலையில் நெருக்கடியிலுள்ள மத்திய அரசு, சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் இவர்கள்தான் என்று ஒரு பட்டியல் ஏற்கனலே வெளியே உலாவிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பட்டியலின் நம்பகத் தன்மைக்கு ஆதாரம் ஏதுமில்லை என்பது உண்மைதான். ஆனால், குறிப்பிட்ட பட்டியல், மக்கள் மத்தியில் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நிஜம்.
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்கள், வரும் செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசின் கைகளுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மக்களவையில், ஒரு கேள்விக்குப் பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இந்த அறிவிப்பைச் செய்துள்ளார்.
“சுவிட்சர்லாந்து வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தியர்களின் விவரங்களைப் பெறுவதற்காக அந்த நாட்டுடன் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு சுவிட்சலாந்து நாடாளுமன்றமும் ஒப்புதல் அளித்துவிட்டது” என்றார் அவர்.
சுவிட்சலாந்து நாட்டின் விதிமுறைகளின்படி, சுவிஸ் அரசு ஒப்புதல் கொடுத்தாலும், அங்குள்ள அனைத்து மாநிலங்களும் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்னர்தான் சுவிஸ் அரசு, அனைத்து விவரங்களையும் இந்தியாவுக்கு அளிக்கும். இந்த நடைமுறை செப்டெம்பர் மாதத்துக்குள் முடிந்துவிடும் என்பது நிதியமைச்சரின் கணிப்பு.
கவனிக்கவும், இது ஒரு கணிப்புத்தான். சுவிஸ் அரசு, செப்டெம்பர் மாதத்துக்குள் எல்லாம் முடிந்து விடும் என்று கூறவில்லை.
மற்றொரு விஷயம், இந்த ஒப்பந்தத்தின் வாசகங்களும் இரு தரப்பாலும் வெளியிடப்படவில்லை. அந்த ஒப்பந்தம், ‘இந்தியா கேட்கும் விபரங்களை, சுவிட்சலாந்து அரசு வழங்கும்’  என்ற வகையில்கூட இருக்கலாம். அப்படியிருந்தால், மத்திய அரசுக்கு வசதியான ஒப்பந்தமாகவே அது இருக்கும்.
எப்படியென்றால், மத்திய அரசு சில நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை சுவிஸ் அரசிடம் கொடுத்து, இந்தப் பட்டியலில் உள்ள ஆட்களில் யாராவது சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார்களா என்று கேட்கும் வகையில் அது அமைந்துவிடும். அந்தப் பட்டியலில் உள்ள நபர்களில் யார் யாருக்கு சுவிஸ் வங்கிக் கணக்குள் உள்ளன, அதில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை மாத்திரம் சுவிஸ் அரசு வழங்கிவிட்டு ஒதுங்கிக் கொள்ளும்.
ஆம். மத்திய அரசு அனுப்பும் பட்டியலில் ஒருவரது பெயர் இல்லாவிட்டால், அவருடைய பெயர் சுவிஸ் அனுப்பும் பட்டியலிலும் இடம்பெறாது – அவருக்கு சுவிஸ் வங்கிக் கணக்கு இருந்தால்கூட!
பாதுகாப்பான டீல்தான். இல்லையா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக