Cricket Scores
- Upcoming Matches
Eng V Ind
Only Twenty20
Wed 31st Aug
SL V Aus
1st Test
Wed 31st Aug
Zim V Pak
Only Test
Thu 1st Sepங்கள்
முன்னாள் ஆந்திர முதல்வர் ரோசய்யாவை தமிழக ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவு பிறப்பித்தார். எஸ்.எஸ்.பர்னாலாவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதைத் தொடர்ந்து புதிய ஆளுநராக ரோசய்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வரும் 31-ம் தேதி மாலை 4. 22 மணி அளவில் தமிழக ஆளுநராக பதவியேற்கிறார். இதற்காக அவர் புதன்கிழமை காலை விமானம் மூலம் சென்னை வருகிறார்.
ரோசய்யா கடந்த 1968-ம் ஆண்டு ஆந்திர சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பலமுறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஒரு முறை லோக் சபாவுக்கும் தேர்வானார். அவர் பல முதல்வர்கள் அமைச்சரவைகளில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
ஆந்திர மாநில பட்ஜெட்டை 16 முறை தாக்கல் செய்துள்ள பெருமை அவருக்கு மட்டும் தான் உள்ளது. இந்திய அரசியலிலேயே இதுவரை யாரும் 16 முறை மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்ததில்லை. கடந்த 2007-ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைபடுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக