ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையின் கொலைக்களங்களை’ பார்த்த என் மகன், இலங்கையர் என்றுகூற வெட்கம்


    இலங்கையின் கொலைக்களங்களை பார்த்த என் மகன், இலங்கையர் என்றுகூற வெட்கம் என்றார்: சந்திரிகா
  • பிரித்தானிய தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஆவணப்படத்தைப் பார்த்த 28 வயதான தனது மகன், தான் ஓர் இலங்கையர் எனவும் பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிகழ்த்திய, முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணர் நினைவுச் சொற்பொழிவின்போதே  அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் ‘பொருளாதார அபிவிருத்தி, உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் சமாதானம்’ என்ற தலைப்பில் திருமதி சந்திரிகா குமாரதுங்க பிரதான உரையாற்றினார்.
“28 வயதான எனது மகன் பிரித்தானிய தொலைக்காட்சியில் பார்த்தபின்னர் தான் ஓர் இலங்கையர் எனவும் பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக எனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த காலை வேளையை நான் எனது வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன். எனது மகளும் இதேபோன்ற கருத்தை தெரிவித்தார். எமது நாட்டவர்கள் இத்தகைய பயங்கர நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்பது குறித்து அவர் அதிர்ச்சியையும் அச்சத்தையும் வெளிப்படுத்தினார்.
எனது மகனும் மகளும் மற்றவர்களை கவனித்துக்கொள்கிறார்கள் என்பது குறித்து நான் பெருமையடைகிறேன். அவர்கள் தமது தந்தை, தாய் விரும்பியபடியான மனிதர்களாக வளர்ந்துள்ளார்கள் என்பது குறித்து நான் பெருமையடைகிறேன்” என உணர்ச்சிவசப்பட்டவராக திருமதி சந்திரிக்கா குமாரதுங்க கூறினார்.
“ஒரு தேசம் என்ற வகையில் இலங்கையர்கள் தோல்வியடைந்துவிட்டோம் என்பதை ஏற்றுக்கொள்ளும் தன்னடக்கத்தை நாம் கொண்டிருப்போம். எமது தவறுகளை ஒப்புக்கொள்வதற்கான நேர்மையையும் திருத்தங்களை செய்வதற்கான பெருந்தன்மையையும் நாம் கொண்டிருப்போம். நிரூபிக்கப்பட்ட உண்மைகளையும் நேர்மையான விமர்சனங்களையும் தொடர்ச்சியாக நிராகரிப்பது எவரினதும் பிரச்சினையைத் தீர்க்காது. நல்லிணக்கம் மற்றும் புனரமைப்பை அடையும் உயரிய இலக்கிற்கு எமது தலைவர்கள் தலைமை தாங்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்நாட்டின் பயங்கர வன்முறை மோதல்களுக்கு 1956 ஆம் ஆண்டின் தனிச்சிங்கள சட்டமே காரணம் என அவர் கூறினார். “தமிழ் இயக்கத்தின் மொழி சமத்துவத்துக்கான கோரிக்கை அரசினால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டமை சமஷ்டி கோரிக்கைக்கும் இறுதியாக தனிநாட்டு கோரிக்கைக்கும் இட்டுச் சென்றது. 1958, 1977, 1980, ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் 1983 ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை என்பன சமாதானத்திற்கு ஆதரவான தமிழ் பொதுமக்களைகூட, சிங்கள ஆதிக்கமுள்ள நாட்டில் நீதியையும் சமவுரிமையையும் அடைய முடியாது என்று நம்பச் செய்தன.
சிறுபான்மையினரின் அரசியல், சமூக, பொருளாதார துறைகளில் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்துவதன் மூலம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு 1972, 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புகள்   தவறின.
யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்டமை குறித்து நானும் மிக மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் நாம் யுத்தத்தில் வென்றாலும் சமாதானத்திற்கான யுத்தத்தில் இன்னும் வெற்றி பெற ஆரம்பிகக்க்கூட இல்லை என்ற உண்மையை குறித்து நான் கண்மூடியிருக்க முடியாது.
சமாதானத்தை வெல்வதற்கு ‘ஏனையோரை’ அபிவிருத்தியில் மாத்திரமல்லாமல், அதிகார பரவலாக்கத்துக்கான அரசாங்கத்தின் செயன்முறைகளில் முழுமையான, சமத்துவ பங்களார்களாக முழுமையாகவும் நேர்மையாகவும் உள்ளடக்க வேண்டும்.
நீண்டகாலமாக தீர்க்கப்படாத தமிழர் பிரச்சினையின் விளைவான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தமிழ் சிவில் சமூகம் வேறுபட்டது என்பதை யுத்தத்தில் வெற்றி கொண்ட அரசாங்கமும் சிங்கள சமூகமும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் ஏனையோரைப்போன்றே இலங்கையில் சமத்துவமான பிரஜைகளாக வாழும் அவாவைக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் ஐக்கியமான அமைதியான இலங்கையில், சமத்துவமான உரிமைகளையும் வாய்ப்புகளையும் கொண்டவர்களாக சிங்களவர்களுடன் எமது சகோதர சகோதரிகளாக வாழ விரும்புகிறார்கள்.  இலங்கை பிரிக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கான சிறந்த செயன்முறையாக இருக்கும்.
அதேவேளை, மறுபுறம் சிங்களவர்களின் அச்சத்தை நியாயப்படுத்துவற்கு காரணங்கள் இருக்கின்றன என்பதை நான் கூறத் துணிகிறேன். இலங்கை மீது 14 நூற்றாண்டு காலத்தில் 52 தடவை தென்னிந்திய ஆட்சியாளர்கள் படையெடுத்துள்ளனர் என்பதை வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. அவர்கள் சில தடவை வெற்றிகொண்டார்கள். சிங்கள மக்களின் பொதுவான அச்சத்திற்கு இது போதுமானதாக இருக்கலாம்.
பலமான தேசிய அடையாளத்தை ஒன்றிணைந்து ஏற்படுத்துவதற்காக அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்கள் பௌதத்தை அரச மதமாக பின்பற்றினர். அத்துடுன் ‘எதிரிக்கு’ எதிராக போரிடுவதற்கு படைத்திரட்டுவதற்கும் அதை பயன்படுத்தினர்.
நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வழங்கப்பட்ட மாகாண சபை முறைமையை வடக்கு கிழக்கிற்கு ஏன் வழங்க முடியாது? சிறுபான்மையினருடனும் அவர்களின் தலைவர்களுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எம்மிடமிருப்பதை பகிர்ந்துகொள்வதால் எமது பலம்  குறைந்துவிடப்போவதில்லை. மாறாக அது பிரிந்திருக்கும் சமூகங்களை ஒன்றிணைக்கும்.
நாட்டின் தலைவராக இருந்த எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் நான் தனிப்பட்ட ரீதியில் சமஷ்டிக்கு அர்ப்பணிப்புடன் இருந்தேன்” எனவும் அவர் கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக