கான்பூர்: உத்தர பிரதேசத்தில் உள்ள பல்வான் ரயில் நிலையம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை கல்கா எக்ஸ்பிரசின் 15 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் 70 பேர் பலியாயினர். 250க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து காரணமாக ஹவுரா-டெல்லி மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, அந்த பாதையில் நேற்று காலை 8 மணி முதல்தான் மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இந்நிலையில் அதே பாதையில் சென்ற கான்பூர்-கஸ்கன்ச் எக்ஸ்பிரஸ் ரயில் மீது தாவூர்சாலர் என்ற இடத்தில் மிகப்பெரிய மரம் விழுந்தது. இதில் ஜன்னலோரம், கதவோரம் அமர்ந்திருந்த பயணிகள் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர். பலத்த காயமடைந்த 5 பேர் லாலா லஜ்பத் ராய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதை சீரமைக்கப்பட்ட சில மணி நேரங்களில் மீண்டும் ஒரு விபத்து நடந்திருப்பது ரயில் அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக