
ஒரு பெண் முதுகெலும்பு முறிந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஹரித்வாரில் நேற்று பேட்டி அளித்த ராம்தேவ், மத்திய அரசை மன்னித்து விட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் ராம்தேவ் இன்று கூறியதாவது: அடுத்த முறை போராட்டத்தில் பங்கேற்பவர்கள் ஆயுதங்களுடன் எதிர்தாக்குதலுக்கு தயாராக இருப்பார்கள். ராம்லீலா, ராவண்லீலாவாக மாறும்.
அப்போது யாருக்கு அடி விழுகிறது என்பதை பார்ப்போம். இதற்காக ஒவ்வொரு பிராந்தியத்திலிருந்தும் 20 இளைஞர்கள் முன்வர வேண்டும். அவர்கள் 30 லிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களும் முன்வரலாம். அவர்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணிக்க தயாராக இருக்க வேண்டும். அவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிக்கப்படும். 10 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய படையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ராம்தேவ் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக