சேனல் 4 வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவண தொகுப்பு தொடர்பில், தம்மிடம் சர்வதேச ரீதியிலான பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வருமாறு குறித்த ஆவண தொகுப்பின் இயக்குனர் கெலம் மெக்ரேவிற்கு தாம் வழங்கியிருந்த
48 மணிநேர காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, சர்வதேச மன்னிப்பு சபையோ, மெக்ரோயோ இதற்கு எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் சேனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக ரூ. 100 மில்லியன் டொலர்களை இழப்பீடாக கோரி ஆஸ்திரேலியா, கனடா மற்றும் சுவிற்சர்லாந்தில் உள்ள மூன்று சிங்கள அமைப்புக்கள் வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும், சேனல் 4 தொலைக்காட்சியின் ஜோன் ஸ்னோ மற்றும், 'இலங்கையின் கொலைக்களம்' ஆவண படத்தின் இயக்குனர் கெலம் மெக்ரே ஆகியோரை எதிர்த்த்து இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும், இலங்கை அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ள இவ்வழக்கு தொடர்பில் ஐந்து பேர் அடங்கிய சட்ட வல்லுனர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக குறித்த சிங்கள அமைப்புக்களில் ஒன்றின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை சேனல் 4 ஊடக குற்றச்சாட்டுக்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என சிறிலங்கா அரசு தமக்கு அறிவித்துள்ளதாக கூறியுள்ள பொது நலவாய நாடுகளின் செயலகம், இதனை வரவேற்பதாக தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக