ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரயில்வே முன்பதிவு டிக்கெட்களை பெற புதிய இணையதளம் விரைவில்


ரயில்வே நிர்வாகம் சார்பில், விரைவில் புதிய இணையதளம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த இணையதளம் மூலம், குறைந்த கட்டணத்தில், முன்பதிவு டிக்கெட்களை பெறலாம் என, ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: ரயில்வே துறையில், ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐ.ஆர்.சி.டி.சி.,) பணி, மிகவும் முக்கியமானது. ரயில் பயணிகளுக்கான சுற்றுலா, உணவு வசதி, டிக்கெட் விற்பனை செய்யும் பணி, ஆகியவற்றை, இந்த நிறுவனம் கவனித்து வருகிறது. இதில், உணவு வினியோகம் செய்யும் பணியை, ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் இருந்து, திரும்பப் பெறுவது என, ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து விட்டது. ஆனாலும், டிக்கெட் விற்பனை பணியை, அந்த நிறுவனம் தொடர்ந்து, கையாளும். இந்நிலையில், ரயில்வே தகவல் மையம் (சி.ஆர்.ஐ.எஸ்.,) என்ற அமைப்பின் சார்பில், புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்த, ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இந்த புதிய இணையதளம் வாயிலாகவும், ரயில் பயணிகள், தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். இந்த சேவைக்காக வசூலிக்கப்படும் கட்டணம், ஐ.ஆர்.சி.டி.சி., வசூலிக்கும் கட்டணத்தைவிட, குறைவாக இருக்கும். "ஏசி' பெட்டிகளுக்கான முன்பதிவுக்கு, ஒரு டிக்கெட்டுக்கு பத்து ரூபாயும், தூங்கும் வசதியுடைய பெட்டிகளுக்கான முன்பதிவுக்கு ஐந்து ரூபாயும், சேவைக் கட்டணமாக வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இதற்காக, ஐ.ஆர்.சி.டி.சி., வசூலிக்கும் கட்டணத்தை விட, இது அரை மடங்கு குறைவு. கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரியின் ஒப்புதல் கிடைத்தபின், இந்த இணையதளம் அறிமுகப்படுத்தப்படும். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து, இந்த இணையதளத்தை உருவாக்கி வருகிறோம். இவ்வாறு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக