ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஐபோன் பாவனையாளர்கள் செல்லும் இடங்கள் பற்றிய தகவல்கள் இரகசியமாக கண்காணிக்கப்படுகிறதா?


ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான தயாரிப்பான ஐபோன் பாவனையாளர்களின் இருப்பிடங்கள் மற்றும் அவர்கள்
செல்லும் இடங்கள் பற்றிய தகவல்கள் இரகசியமாக 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து


அவர்களுக்கு தெரியாமல் திரட்டப்படுவதாக பரவலான செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக iPhone Tracker எனும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி மேலும் தெரியவருவது,

2010 ஜூன் மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டதாகவும் அதன் போது

ஐபோன் பாவனையாளர்களின் இருப்பிடத்தை பற்றிய தகவல்களை திரட்டி அவர்களுக்கு தெரியாமல் அனுப்பக்கூடிய இரகசிய மென்பொருள் ஒன்றும் சேர்ந்து வெளியிடப்பட்டதாகவும் இதை தாங்கள் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ஐபோன் பாவனையாளர்கள் http://petewarden.github.com/iPhoneTracker/ என்ற தளத்திற்கு சென்று அதனது மென்பொருளை நிறுவினால் எல்லா ஐபோன் பாவனையாளர்களும் தாங்கள் சென்ற எல்லா இடங்களின் தகவல்களையும் பார்வையிட முடியும் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு இரகசியமாக தகவல்கள் சேமிக்கப்படுவதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி சரியான தகவல்கள் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக