இஸ்லாமிய மதப்போதகர் ஜேர்மனியை விட்டு வெளியேற உத்தரவு
தீவிரவாத இஸ்லாமிய மதப்போதகர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ஜேர்மனி உத்தரவிட்டுள்ளது.குறிப்பிட்ட அந்த மதப்போதகர் பிராங்பர்ட் நகரில் நடந்த பேரணிக் கூட்டத்தில் உரையாற்றியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேரணிக் கூட்டத்திற்கு நகரத் தலைவர் எதிர்ப்பு தெரிவித்த போதும் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக குறிப்பிட்ட மதப்போதகர் உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது. அவர் தானாக ஜேர்மனியை விட்டு வெளியேறாத பட்சத்தில் கைது செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார் என அரசு நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஜமைக்காவில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர் பிலிப்ஸ். அவர் இந்த வாரத் துவக்கத்தில் ஜேர்மனியில் "தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இனம் இஸ்லாம்" என்கிறத் தலைப்பில் பேசினார். இஸ்லாமிய மதப்போதகர் பியரி வோகலும் கலந்து கொண்டார்.
பிராங்பர்ட் அதிகாரிகள் பேரணிக்கு அனுமதி மறுத்த போதும் அந்த நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்து இருந்தது. இதனால் பிலிப்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டியது இல்லை என அவரது தரப்பினர் தெரிவித்தனர்.
பேரணி கூட்டத்தில் 1500 பேர் திரண்டு இருந்தனர். இதில் தீடீரென அவரது பேச்சுவார்த்தை வன்முறையை தூண்டுவதாக இருந்தது. இவருக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக