ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

விடுமுறையில் செல்வதற்காக ?

#
விடுமுறையில் செல்வதற்காக 2 நாட்களில் 29 கர்ப்பிணிகளுக்கு பிரசவ தேதிக்கு முன்பாகவே டாக்டர்கள் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்த சம்பவம், கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலாவில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு மகளிர் நோய் பிரிவில் 5 பெண் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர்.  மருத்துவமனைக்கு அந்த பகுதியை சேர்ந்த மீனவர் குடும்பத்தினர் அதிகளவில் வருகின்றனர். இங்கு பிரசவ அறுவை சிகிச்சை வசதியும் உள்ளது. 

இந்த மருத்துவமனையில் வரும் 24ம் தேதி வரை 30 கர்¢ப்பிணிகளுக்கு பிரசவ தேதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த செவ்வாய், புதன் கிழமைகளில் 29 கர்ப்பிணிகளுக்கு அவசர அவசரமாக சிசேரியன் அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியில் எடுக்கப்பட்டது. இதனால் மருத்துவமனையில் போதிய இட வசதி இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்களும், குழந்தைகளும் தரையில் படுக்க வைக்கப்பட்டனர். 

இதுபற்றி அவர்களின் உறவினர்கள் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. நேற்று புனித வெள்ளி என்பதால் அரசு விடுமுறை, அத்துடன் சனி, ஞாயிறு வழக்கமான விடுமுறை. வியாழக்கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் டாக்டர்கள் விடுமுறையில் செல்வதற்காகவே 2 நாளில் அவசர அவசரமாக பிரசவ தேதிக்கு முன்னதாகவே கர்ப்பிணிகளை அழைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

பின்னர், 5 டாக்டர்களில் 4 பேர் 21ம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறையில் சென்று விட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இது குறித்து உடனடியாக விசாரணை நடத்த சுகாதாரத் துறை இயக்குனருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக