தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளால் பொதுமக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் வக்கீல் என்.ஜோதி வாதிட்டார். தேர்தல் கமிஷன் சோதனை நடத்தி, பொது மக்களிடம் பணம் பறிமுதல் செய்வதை எதிர்த்து வக்கீல் பட்டி பி.ஜெகநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் நடந்த விவாதம் வருமாறு
: மனுதாரர் வக்கீல் என்.ஜோதி : தமிழகத்தில் தேர்தல் கமிஷன் தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதைப்போல செயல்பட்டு வருகிறது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கை எமர்ஜென்சி காலத்தை நினைவுபடுத்துகிறது. இந்த சர்வாதிகார நடவடிக்கையை கோர்ட் தடுத்து நிறுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் தங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கியிருப்பதாக தேர்தல் கமிஷன் கூறுகிறது. ஆனால் சில நிபந்தனைகளையும் உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.
தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் தமிழகத்தில் மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. மகள் திருமணத்துக்கு நகை, புடவை கூட வாங்க முடியவில்லை. வியாபாரிகள் பொருட்கள் எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். நிதி நிறுவனங்கள் யாருக்கும் கடன் கொடுக்கவும் முடியவில்லை. தேர்தல் கமிஷனின் தொல்லையால் மக்கள் பணத்தை வெளியே எடுத்துச் செல்லவே பயப்படுகிறார்கள். ஆதாரம் கொடுத்தாலும் பணத்தை பறிமுதல் செய்து குற்றவாளிகளைப்போல எப்ஐஆர் போடுகிறார்கள். இதனால், பொதுமக்களின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய குடிமகன்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளை பிடிப்பதுபோல இயந்திர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் துணையுடன் பொதுமக்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர். எமர்ஜென்சி காலத்தில்கூட இப்படி நடந்ததில்லை. தேர்தல் கமிஷன் சார்பாக ஆஜராகும் வக்கீல் ராஜகோபால், அதிமுகவுக்கு ஆதரவாகவும் ஜெய லலிதாவுக்கு நெருக்கமானவர் வழக்கிலும், கோடநாடு வழக்கிலும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி வழக்கிலும் ஆஜராகி வாதாடியுள்ளார்.
நீதி, நேர்மை குறித்து பேசும் தேர்தல் கமிஷன், இப்படி ஒருதலைபட்சமாக செயல்படும் வக்கீலை நியமித்திருப்பது நியாயமா? பணம் பறிமுதல் தொடர்பான தேர்தல் கமிஷன் விதிமுறையை ரத்து செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ராஜகோபால் ஒருதலைபட்சமாக செயல்படுவார் என்பதற்கு பல உதாரணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். இப்படி ஒரு தலைபட்சமாக செயல்படும் வக்கீலை நீக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். சுயஉதவி குழுவினர் நிதி உதவி கிடைக்காமல் தவிக்கிறார்கள். தேர்தலுக்காக வியாபாரிகள் தங்கள் வியாபாரத்துக்கு விடுமுறை விட முடியுமா?
தலைமை நீதிபதி : திருச்சியில் பஸ் கூரையில் ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் யாருடையது என்றுகூட தெரியவில்லை. இதற்கு யாரிடம் புகார் வாங்குவது, இதற்கு பதில் கூறுங்கள்? வக்கீல் என்.ஜோதி : நீங்கள் இன்று பத்திரிகை செய்தியை பார்த்து விட்டு வந்து பேசுகிறீர்கள். அதை பார்க்காதீர்கள். எப்படி எப்.ஐ.ஆர். போட வேண்டும் என்று சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதைத்தான் தேர்தல் கமிஷன் பின்பற்றவேண்டும் என்று கேட்கிறோம். அதிக அளவுள்ள பணத்தை பிடிப்பதாக கூறுகிறார்கள். அது எவ்வளவு என்று கூறவில்லை. தலைமை நீதிபதி : நீங்கள் வருமான வரித்துறை வக்கீல் தானே? வக்கீல் என்.ஜோதி : நான் வருமான வரி கட்டுபவன். நான் வருமான வரித்துறை வக்கீல் இல்லை. மனுதாரர் பட்டி ஜெகநாதன் தான் வருமான வரித்துறை வக்கீல்.
தலைமை நீதிபதி : தமிழக மக்கள் எப்பொழுதும் அமைதியை விரும்புபவர்கள். பொறுப்புள்ளவர்கள். தமிழக வக்கீல்கள் மரியாதைக்குரியவர்கள் தான். தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால் வக்கீல்கள் மத்தியில் மனநிலை மாற்றம் ஏற்படுகிறது. வக்கீல் என்.ஜோதி : அரசு விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானங்களை எடுத்து சென்றாலும், அதை கள்ளச்சாராயம் என்று பறிக்கிறார்கள். சந்தேகத்தின் பெயரில் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்கிறார்கள். எந்த மாதிரியான ஆயுதம் வைத்திருந்தால் பிடிக்கப்படும் என்று கூறவில்லை.
பாதுகாப்புக்காக சிலர் போலீசாரிடம் லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வைத்திருப்பார்கள். அதையும் தேர்தல் அதிகாரிகள் பிடிக்கிறார்கள். மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கக்கூட பணம் எடுத்துச் செல்ல முடியவில்லை. மாணவர்களின் படிப்பை தடுக்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை அகற்றுகிறார்கள். இவர்கள் போக்கை பார்த்தால் காந்தி, இந்திராகாந்தி ஆகியோரின் படங்களையும் அகற்றி விடுவார்கள்போல தெரிகிறது. தேர்தல் அதிகாரிகள் சுல்தான்போல செயல்படுகிறார்கள். தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக செயல்பட தடை விதிக்க வேண்டும். திமுகவுக்கு எதிரானவர்கள் தேர்தல் கமிஷனை வழி நடத்துகிறார்கள்.
தேர்தல் கமிஷன் வக்கீல் ராஜகோபால் : பணம் பறிமுதல் விவகாரத்தில் ஏற்கனவே உயர் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. மூத்த வக்கீல் என்ற முறையில் எந்தக் கட்சிக்கும் ஆதரவாக வாதாட உரிமை உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க, தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். அரசியல் சாயம் பூசும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காலம் வந்துவிட்டது. இதுதொடர்பாக பார் கவுன்சில் உரிய விதிமுறை வகுக்க வேண்டும். தேர்தல் கமிஷன் நியாயமாக நடவடிக்¬¬ எடுத்து வருகிறது. காரணம் கூறிய பிறகு சோதனை நடத்துவது என்பதை ஏற்க முடியாது. தேர்தல் கமிஷன் சட்ட விதிமுறைகளை பின்பற்றி தான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக