ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு துரோகம் ?


‘இலை கருகட்டும், சூரியன் உதிக்கட்டும்’ என்று தென்காசியில் மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். தென்காசியில் மதிமுக சார்பில் ‘இன்றைய சூழலில் தமிழ்சமுதாயம் ஆளுமை பெற்றிருக்கிறதா அல்லது அடங்கியிருக்கிறதா’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக பங்கேற்று நாஞ்சில் சம்பத் பேசியதாவது  : பிரதமர் மன்மோகன்சிங்கால் கொள்கை தலைவர் என்று பாராட்டப்பட்டவர் வைகோ.
ஒரு ஆலையின் உரிமையாளரிடம் ஆயிரம் கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு எங்களை ஜெயலலிதா புறக்கணித்தார். எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவரும், தென் மாவட்டங்களில் அதிமுகவை தூக்கி நிறுத்தியவர்களுமான கருப்பசாமி பாண்டியன், கம்பம் செல்வேந்திரன், 

சாத்தூர் ராமச்சந்திரன், அழகு திருநாவுக்கரசு, முத்துசாமி, கரூர் சின்னச்சாமி, எம்.ஜி.ஆரின் பெயரை உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்ட தாமரைக்கனி என உண்மையாக உழைத்தவர்களை தூக்கி எறிந்தவர் ஜெயலலிதா. இப்போது தினகரன், திவாகரன், சுதாகரன், பாஸ்கரன் என ஒரு கூட்டம் உள்ளது. அவர்களுக்கே இடம் காணவில்லை. பின்னர் எங்களுக்கு எப்படி இடம் தருவார்கள். ஜெயலலிதாவும், ராஜபக்ஷேவும் ஒரே கோட்டில் உள்ளவர்கள். வாக்காளர்கள் கரும்பு இருக்க இரும்பை தொடக்கூடாது. கனி இருக்க காயை விரும்பக்கூடாது. நட்ட நடுநிசி விலகட்டும். இலை கருகட்டும். சூரியன் உதிக்கட்டும். இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.

தேர்தலை புறக்கணித்துள்ள மதிமுகவினரின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
இந்நிலையில், தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பாளர்கள் சின்னையா, தன்சிங் ஆகியோரை தோற்கடிப்பது என அந்த தொகுதிகளின் மதிமுக சார்பில் ரகசிய கூட்டம் போட்டு முடிவு எடுத்துள்ளனர்.

ஏழு ஆண்டு காலம் அதிமுக கூட்டணியில் இருந்து, தற்போது கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மதிமுகவினர் கொதித்துப்போய் உள்ளனர். தமிழகத்தில் பல இடங்களிலும் அதிமுக கூட்டணியை தோற்கடிப்பது என மதிமுகவினர் முடிவு செய்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதா திருந்தவே மட்டார். அவரது ஆணவ போக்கு மாறவே இல்லை. திருந்துவார் என எதிர்பார்த்தது தவறு, வஞ்சிக்கப்பட்ட எங்கள் தொண்டர்கள் ஜனநாயக கடமையை தெளிவாக செய்வார்கள் என்றும், ஜெயலலிதாவுக்காக பல தியாகங்களை மதிமுக செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். 

ஜெயலலிதா பற்றி வைகோ பேச்சு அடங்கிய சிடி தயாரிக்கப்பட்டு, தொகுதி முழுவதும் மதிமுக நிர்வாகிகள், ஆதரவாளர்களை சந்தித்து வழங்கி வருகின்றனர். இதுவரை 2 ஆயிரம் சிடிக்கள் தொகுதி முழுவதும் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதிமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் து.மணிவண்ணன் கூறுகையில், “கடந்த 7ஆண்டாக அதிமுகவுக்கு ஆதரவாக மதிமுக இருந்தது. பல தியாகங்கள் செய்துள்ளது. வஞ்சகத்தாலும், சூழ்ச்சியாலும் ஏமாற்றப்பட்டுள்ளோம். நஞ்சு எண்ணம் கொண்டவர்களுக்கு நாங்கள் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய தேவை, ஒவ்வொரு மதிமுக தொண்டனுக்கும் உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு உளியாக வேலை செய்தால், ஜெயலலிதா தோற்கடிக்கப்படுவது உறுதி ’’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக