ஆஃப்ரிக்க நாடுகளுள் ஒன்றான மாலியில் நடைபெற்ற மிலாடி நபி கொண்டாட்டங்களில் நெரிசல் ஏற்பட்டு 36 பேர் பலியாகியுள்ளனர்.
மாலி தலைநகர் பாமகோவில் மிலாடி நபியை முன்னிட்டு இமாம் உஸ்மான் மதனி ஹைதாரா என்பவரின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இமாம் உஸ்மான் மதனி அந்நாட்டின் மதிப்பு மிக்க மதத் தலைவராவார். 25 ,000 மக்களுக்கான கொள்ளளவு கொண்ட அந்த அரங்கில் எதிர்பார்த்ததை விடவும் அதிக அளவில் மக்கள் திரண்டிருந்தனர். சொற்பொழிவுக்குப் பின்னர் இமாமிடம் ஆசி பெற கூட்டம் முண்டியடித்ததில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கிய மக்களில் பலரும் மூச்சு திணறியும், மிதிபட்டும் 36 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் பாமகோவில் உள்ள கேப்ரியல் டூர்ஸ் மருத்துவமனையில் இறப்பு மற்றும் காயமடைந்தோர் விபரங்களை அறிந்துகொள்ள மக்கள் குழுமியுள்ளனர். நாட்டின் பிரதமர் மோடிபோ சிடிபே மருத்துவமனைக்கு வருகை தந்து, இறந்தவர்களின் உறவினர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆறுதல் கூறினார்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டுக் குறைபாடாகக் கருதுவதை விடவும் இறைக்கோபமாகவே அங்கு பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர் என்று பிபிசி செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக