ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தடை செய்யவேண்டியது தினமலரையா? பி.ஜேயின் கட்டுரையையா?

கடந்த 26-12-2010 அன்று தினமலர் பதிப்பில் சகோதரர் பி.ஜே. அவர்களின் “துரோகம் செய்தவர்கள்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் திராவிட கட்சிகள் முஸ்லிம்களுக்கு செய்த பல துரோகங்களை பட்டியலிட்டுள்ளார். இதில் மாற்றுகருத்து இல்லைதான். இது த.த.ஜ. இணையத்திலும் செய்தியாக வெளியிடப்பட்டது. நம் சகோதரர்களின் மின்னஞ்சல் மூலமும் பரப்பபடுகின்றது. இகருத்துக்கள் இவர் மூலமே பலமுறை மேடைகளிலும், தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்தவைதான். புதிதாக ஒன்றும் இல்லை!. அதுமட்டுமில்லை, திராவிட கட்சிகளை சாடுகின்றேன் என்று காங்கிரசையும், அதன் ஆட்சியையும் ஆதரித்து வார்த்தையும் அதில் இடம்பெற செய்துள்ளது உள்நோக்கம் கொண்டது!.

அதாவது திராவிட கட்சிகளை விட காங்கிரஸ், கட்சி பதவிகளிலும், ஆட்சியிலும் குறிப்பிட்ட சதவீதத்தை முஸ்லிம்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக ஓரு கருத்தையும் அதில் பதிந்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் திராவிடக்கட்சிகள் மாநில கட்சிகள் மட்டுமே!. காங்கிரஸ் கட்சியோ தேசியக்கட்சி. அதனால் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் அங்கு சற்று கூடுதலாக தெரியலாம். அதை இடஒதுக்கீடு என்று பிரச்சாரம் செய்வது நல்லதல்ல!. இது பிரதமரையும் சோனியா காந்தியையும் ஜூலை மாநாட்டிற்கு பிறகு சந்தித்ததினால் ஏற்பட்ட மாற்றமாக கூட இருக்கலாம்!. இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர இருப்பதால் இவர்களின் நிலை தெரியவரும். திராவிட கட்சிகளாவது நெஞ்சில் குத்தியவர்கள். ஆனால் காங்கிரஸோ பாபரிபள்ளி முதல், பல விசயங்களில் முதுகில் குத்தியவர்கள். கடந்த தேர்தலில் கொடுத்த இடஓதுகீட்டு வாக்குறுதியை இன்னும் மத்தியில் நிறைவேற்றாதவர்கள்.

முஸ்லிம் விரோத போக்கிற்காக தினமலர் நாளிதழை தடைசெய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தும், சகோதரர் பி.ஜே அவர்களும் செய்த பல போராட்டங்களை எல்லாம் ஓரம்கட்டிவைத்து விட்டு, நபி அவர்களை கார்டூன் வரைந்த விசயத்தில், தினமலரை எதிர்த்து போராட்டம் நடத்திவிட்டு, நோன்பு என்றுகூட பாராமல் களம்கண்ட மக்களையும் மனதில் எண்ணாமல், பின் அதே பத்திரிகையில் இவரின் கட்டுரை வெளியாகின்றது என்றால் என்ன அர்த்தம்?. இவர்கள் போராட்டமோ, அல்லது பொதுகூட்டமோ நடத்தியதை தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டதென்றால் அதை நாம் குறைகூற முடியாது. ஏனெனில் அவர்களாகவே வெளியிட்ட செய்தி என்று சென்றுவிடலாம்.

ஆனால் கட்டுரை வெளியாவது என்பது அவ்வாறல்ல!. ஒன்று அவர்கள் நம்மை அணுகி கட்டுரை எழுதி தருமாறு கோரி இருக்க வேண்டும். அல்லது நாமே ஓரு கட்டுரையை எழுதி அதை வெளியிடுமாறு கோரிக்கை வைக்க வேண்டும். இது இரண்டும் இல்லாமல் வேறு எந்த காரணமும் இருக்கமுடியாது.

பல போராட்டங்களின் மூலம் தற்போதுதான் தினமலருக்கு எதிராக நம்மக்களை திருப்பிவிட்ட பிறகு, நாம் தமிழர் போன்ற தமிழர் இயக்கங்களும், விடுதலை சிறுத்தை போன்ற கட்சிகளும் அப்பத்திரிக்கைக்கு எதிராக வீறுகொண்டு சென்று கொண்டிருக்கும் போது, தற்போது ஓரு கட்டுரையை அந்த பத்திரிக்கையில் வெளியிடுவதன் மூலம், மீண்டும் நாம் அதன் வளர்ச்சிக்கு உதவுகின்றோம் என்ற எண்ணம் வேண்டாமா?. நம் சகோதரர்களும் இதை மின்னஞ்சல் மூலமும், இணையத்திலும் அதை மறுவெளியீடு செய்து அந்த பத்திரிக்கை வளர்ச்சிக்கு மறைமுகமாக உதவுவது ஏன்?.

தினமலர் பத்திரிக்கை மன்னிப்பு கூறிவிட்டார்கள். எனவே நாம் ஆதரவு தெரிவிக்கலாம் என்று கூற வருவீர்கலேயானால், மீண்டும் இந்த பத்திரிக்கை இதுபோன்ற ஓரு தவறை செய்யாது என்ற வாக்குறுதியை சகோதரர் பி.ஜே தரத்தயாரா?. இந்த பத்திரிக்கை ஒருபோதும் திருந்தவே திருந்தாது!. எனவே இவர்களின் வார்த்தையிலேயே சொல்ல வேண்டுமானால் தினமலத்தில் சகோதரர் பி.ஜே அவர்கள் கட்டுரையை வைத்ததேன்?. நம்மிடமே உணர்வு என்ற இதழ் உள்ளதே!. அதில் இக்கட்டுரையை வெளியிடலாமே!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக