ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாகிஸ்தானில் ஆறு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தையின் Full Story (படங்கள் இணைப்பு)


பாகிஸ்தானில் 6 கால்களுடன் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்நாட்டு வரலாற்றிலேயே 6 கால்களுடன் குழந்தை பிறந்திருப்பது இது தான் முதல் தடவை என்று பாகிஸ்தானிய மருத்துவர் முகமது கைசர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள சுக்கூரைச் சேர்ந்தவர் இம்ரான் அலி ஷேக்(31). எக்ஸ்ரே டெக்னிஷியன். அவரது மனைவி அப்ஷான்(27). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு கடந்த 12ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அதன் உடலில் 6 கால்கள் உள்ளன. இதைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

வறுமையில் வாடும் தன்னால் குழந்தைக்கு சிகிச்சை செய்ய முடியாது என்றும், அதற்கு உதவுமாறும் இம்ரான் அரசைக் கேட்டுக் கொண்டார். இதையடு்தது குழந்தையின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்வதாக சிந்த் மாகாண ஆளுநர் அறிவி்த்தார். இதையடுத்து குழந்தை கராச்சியில் உள்ள தேசிய குழந்தைகள் சுகாதார நிறுவனத்துக்கு மாற்றப்பட்டு அங்கு ஐசியுவில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கு உமர் பரூக் என்று பெயரிடப் போவதாக இம்ரான் தெரிவித்தார். 
தற்போது பிறந்துள்ள குழந்தையுடன் ஜனித்த மற்றொரு குழந்தை வளர்ச்சியடையாததால் அதன் உடல் பாகங்களும் சேர்த்து இந்த குழந்தைக்கு வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவி்த்தனர். 5 மருத்துவர்கள் கொண்ட குழு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கவிருக்கிறது. குழந்தையின் உடலில் அதிகமாக உள்ள கால்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படுகிறது. 
இந்த குழந்தையின் உடம்பில் எக்ஸ்ட்ராகவாக உள்ள கால்களை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றிவிடலாம். பாகிஸ்தான் வரலாற்றிலேயே 6 கால்களுடன் குழந்தை பிறந்திருப்பது இது தான் முதல் தடவை என்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயன்சஸில் பணி புரியும் மருத்துவர் முகமது கைசர் தெரிவித்தார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக