ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எல்லா அணைகளையும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும்; பிரதமருக்கு அப்துல்கலாம் கடிதம்



முல்லைப் பெரியாறு:

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, சில ஆலோசனைகளை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அப்துல்கலாம் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம்.

அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம், தமிழக மக்களுக்கு கூடுதல் தண்ணீரும், கேரள மக்களுக்கு கூடுதல் மின்சாரமும் கிடைக்கும். அணையின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணைகள் இவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத்தின் வசம் ஒப்படைக்க வேண்டும். அமெரிக்கா உள்பட பல நாடுகளில் அணை கட்டுவது முதல், அதை கட்டுப்படுத்தி பராமரிப்பது வரை அனைத்து பணிகளையும் ராணுவமே மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், நதிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகளின் போது, எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சினையால் இரு மாநில உறவும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தேசிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக