ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈசியாக கிடைக்கும் யு.எஸ். விசா!வாங்க அமெரிக்காவை சுற்றி பார்க்க போகலாம்


டெல்லி: 1990களோடு ஒப்பிடுகையில் தற்போது யு.எஸ். விசா எளிதாக கிடைக்கிறது. 
பெரும்பாலான இந்தியர்கள் அமெரிக்காவுக்கு சென்று படிக்க வேண்டும், வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரி்க்கத் தூதரகத்திற்கு சென்றால் அங்கு நீண்ட வரிசையில் காத்திருப்போரை காண முடிகிறது. 1990களில் எல்லாம் யு.எஸ். விசா கிடைப்பது கஷ்டம். ஆனால் தற்போது எளிதில் விசா கிடைக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் இந்தியர்களின் விசா மனுக்கள் பரிசீலிக்கப்படுவதாக அமெரிக்க தூதரக அதிகாரி டானல்ட் லு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்தியாவில் பல அமெரி்க்க நிறுவனங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதற்கு அவர்களை இந்தியா கவர வேண்டும். பல கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இரு நாட்டு மக்களும் பேசிப் பழக வேண்டும். அமெரிக்காவில் சில்லறை மற்றும் கல்வி பிரிவுகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ் 34 மில்லியன் டாலரும், விப்ரோ 75 மில்லியன் டாலரும், யுஎப்எல்இஎக்ஸ் 180 மில்லியன் டாலரும் முதலீடு செய்துள்ளன என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக