ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்திய மூவர்ணக் கொடி கூட சீன தயாரிப்புதான்!

இந்திய சந்தையில் சீன பொருட்களுக்கு இருக்கும் கிராக்கி தெரிந்த சங்கதிதான்.100 ரூபாய் விலையில் இந்திய நிறுவனம் ஒன்று தயாரித்து விற்கும் பொருளை, அந்த பொருள் சந்தைக்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே 10 அல்லது 20 ரூபாய் அளவுக்கு இந்திய சந்தைகளுக்கு கொண்டு வந்து கல்லா கட்டி விடும் சீன நிறுவனங்கள்.
 

அப்படி இதுவரை குண்டூசி முதல் கம்ப்யூட்டர் வரை நுகர்வோர் பொருட்களை தயாரித்து விற்றுக்கொண்டிருந்த சீன நிறுவனங்கள், தற்போது இந்திய மூவர்ணக் கொடியையும் மலிவான விலையில் தயாரித்து, அதையும் இந்திய சந்தைகளுக்கு அனுப்பி, இந்திய தேச பக்தியையும் தனது கல்லா பெட்டியில் காசாக்கி போட்டுக்கொண்டிருக்கும் தகவல் தற்போதுதான் அம்பலமாகி உள்ளது. 

அதிலும் சமீபத்தில் ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தாரே... அப்போது நமது மக்களுக்கு தேச பக்தி ஏகமாக பீறிட்டுக் கிளம்ப, அதை வெளிக்காட்டுவதற்காகவும், ஹசாரேவுக்கு தங்களது ஆதரவை தெரிவிப்பதற்கும் கைகளில் இந்தியாவின் தேசிய மூவர்ணக் கொடி தேவைப்பட்டது. 

ஹசாரேவுக்கு ஆதரவாக அணி திரள்வோர்,தொலைக்காட்சி கேமராக்கள் தங்கள் பக்கம் திரும்புவதை பார்த்து கைகளில் இந்த மூவர்ணக் கொடியை அசைத்து "ஹசாரே வாழ்க!" என்றெல்லாம் முழக்கங்களை எழுப்பினர்.

தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட இந்த "ஹசாரே ஆதரவு கிளிப்பிங்குகள்" மற்ற நகரங்களை காட்டிலும் மும்பைவாசிகளிடம் தேசப்பற்றை ஒரு அவுன்ஸ் கூடுதலாகவே சுரக்க வைத்துவிட்டது போலும்! மூவர்ணக் கொடியை கேட்டு கடைகளில் குவிந்துவிட்டனர்.

அதிலும் எந்த பொருட்களானாலும் மார்க்கெட் நிலவரத்திற்கு ஏற்ப தயாரித்து அல்லது இறக்குமதி செய்யும் மும்பையின் பிரபல கிராஃபோர்ட் மார்க்கெட்டில் மூவர்ணக் கொடிகளுக்கு மொத்தம் மொத்தமாக ஆர்டர்கள் குவிந்தன.அதே சமயம் விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்! 

பார்த்தார்கள் நமது மொத்த வியாபாரிகள்.எந்த பொருளானாலும் சல்லிசான விலையில் தயாரித்து தரும் தங்களது சீன நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்தார்கள்.அடுத்த சில தினங்களில் மும்பை சந்தையில் வந்து குவிந்துவிட்டன இந்திய மூவர்ணக் கொடிகள்!- அதுவும் மலிவான விலையில்!-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக