ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இறுதிவரை போராடுவேன்; லிபியாவுக்காக வீரமரணம் அடைவேன்: ஆட்சியிழந்த கடாபி கொக்கரிப்பு

லிபியாவில் புரட்சி படையிடம் ஆட்சியை இழந்துள்ள முன்னாள் அதிபர் கடாபி, இறுதி வரை போராடுவேன். லிபியாவுக்கான வீரமரணம் அடைவேன் என்று கொக்கரித்துள்ளார். தலைநகர் திரிபோலியில் அவர் ஒளிந்திருக்கக்கூடும் என்று கருதி நேட்டோ மற்றும் புரட்சி படையினர் தேடி வருகின்றனர். லிபியாவை கடந்த 42 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் கடாபி.


வயது 69. இளைஞர்கள் தலைமையில் அமைந்த புரட்சி படை கடந்த பிப்ரவரியில் கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் இறங்கியது. அதை ஒடுக்க ராணுவத்தை ஏவினார் கடாபி. இருதரப்புக்கும் பயங்கர மோதல் நீடித்தது.
புரட்சி படைக்கு மக்கள் ஆதரவு அதிகரித்ததால் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலையிட்டு கடாபியை பதவி விலக வலியுறுத்தினர். மறுத்தார் அவர். இதையடுத்து, ஐ.நா. அனுமதி பெற்று புரட்சி படைக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் கடாபி ஆதரவு ராணுவம் மீது தாக்குதல் நடத்தின.

இந்நிலையில், தலைநகர் திரிபோலியை ஞாயிறன்று சுற்றி வளைத்த புரட்சி படையினர் அதிபர் மாளிகையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அங்கு பதுங்கியிருந்த கடாபியின் 3 மகன்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், கடாபியின் இருப்பிடம் பற்றிய தகவல் தெரியவில்லை. 

கடாபி வெளிநாடு தப்பியிருக்கலாம் என்றும், பதுங்கு குழியில் லிபியாவிலேயே பதுங்கியிருக்கலாம் என்றும் பல தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அவர் லிபியாவை விட்டு தப்பியிருக்க முடியாது என்றும் திரிபோலியில் பதுங்கியிருக்கக் கூடும் என்றும் வாஷிங்டனில் பென்டகன் செய்தித் தொடர்பாளர் டேவ் லாபன் நேற்று தெரிவித்தார். 

இந்நிலையில், உள்ளூர் ரேடியோவில் அவரது பேச்சு நேற்று ஒலிபரப்பானது. ‘’எனது மாளிகையை தகர்த்த எதிரிகளுடன் இறுதிவரை போராடுவேன். போரில் வீரமரணம் அடைவேன். திரிபோலியை ஆக்கிரமித்துள்ள எலிகளை விரட்டி நகரை சுத்தம் செய்ய வேண்டும்’’ என்று அதில் கடாபி ஆவேசமாக பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக