பெங்களூர்: தர்மஸ்தலா கோயிலில் சத்தியம் செய்வது பற்றி 26ம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறினார்.
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கும், முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் மோதல் அதிகமாகி இருக்கிறது. ஊழல் புகார் கூறி வரும் தன்னை எடியூரப்பா விலைக்கு வாங்க முயற்சிப்பதாக குமாரசாமி சமீபத்தில் குற்றம் சாட்டினார். குமாரசாமி சொல்வது பொய் என்றும், அது உண்மையாக இருந்தால் தர்மஸ்தலா கோயிலில் வரும் 27ம் தேதி சத்தியம் செய்து நிரூபிக்கத் தயாரா என்று எடியூரப்பா சவால் விட்டார். அதை குமாரசாமி ஏற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரில் எடியூரப்பா நேற்று அளித்த பேட்டியில், ‘‘சத்தியம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி பல்வேறு மடாதிபதிகள் என்னை வலியுறுத்தி வருகின்றனர்.
அரசியல் பிரச்னைகளை கோயிலில் தீர்க்க நினைப்பது தேவையற்றது என கூறியுள்ளனர். எனவே, கோயிலில் சத்தியம் செய்வது பற்றிய எனது இறுதி முடிவை 26ம் தேதி அறிவிக்க உள்ளேன். இருப்பினும், 27ம் தேதி தர்மஸ்தலா கோயில் செல்வேன்’’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக