ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகா குறித்து இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச நாடாளுமன்ற சங்கத்தின் பிரதிநிதியொருவர் இலங்கை வந்துள்ளார்;
இந்த தகவலை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தெரிவித்தார்..கடந்த ஜனவரிமாதம் தமது கட்சியினால் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இ;ந்த பிரதி நிதி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்
மாக் ட்ரவல் எனப் பெயர்கொண்ட குறித்த பிரதிநிதி இந்த வாரத்தில் இடம்பெறும் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான வழக்கு விசாரணைகளை கண்காணிக்கவுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக