ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபாகரன் குறித்த கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய சிங்கள ராணுவ தளபதி


கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த கேள்விக்கு சட்டென பதிலளிக்க முடியாமல் குழப்பமான பதிலைக் கொடுத்துள்ளார் இலங்கை ராணுவத் தளபதி சவீந்திர சில்வா.


இலங்கை போர் குறித்த கருத்தரங்கம் கொழும்பில் நடந்தது. இதில் 2வது நாளான இன்று வன்னிப் படைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் குறித்த கேள்வி அரங்கம் இடம் பெற்றது.

போரின் இறுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுடன் தொடர்புடையதாகக் குற்றம்சாட்டப்படும் 58வது டிவிசனின் தளபதியாகப் பணியாற்றிய சவீந்திர சில்வாவிடம் பலரும் கேள்விகளைக் கேட்டனர்.

அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த சவீந்திர சில்வா, விடுதலைப் புலிகளின் தலைமை தனியே பொதுமக்களை மனிதக் கேடயங்களாக மட்டும் பயன்படுத்தவில்லை.

இலங்கை ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக பொதுமக்கள் என்ற போர்வையில் நூற்றுக்கணக்கான தற்கொலைப் போராளிகளையும் அனுப்பி வைத்தது.

பொதுமக்களின் பாதுகாப்புக்காக அறிவிக்கப்பட்ட போர்தவிர்ப்பு வலயங்களில் கூட, புலிகள் பீரங்கிகளை நிறுத்தி மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தினர்.

புலிகளின் பாதுகாப்பு நிலைகளும் பதுங்குகுழிகளும், பொதுமக்களின் தற்காலிக குடியிருப்புப் பகுதிகளுக்குள் காணப்பட்டன என்றார்.

அப்போது கருத்தரங்கில் கலந்து கொண்டுவெளிநாட்டு அதிகாரிகள் சிலர், பொதுமக்கள் மத்தியில் புலிகள் தமது பீரங்கிகளை நிறுத்தி சண்டையிட்டதாக கூறிகின்றீர்கள். இந்தநிலையில் இலங்கை ராணுவத்தின் பீரங்கி வீரர்கள், எப்படி பொதுமக்களைக் கொல்லாமல் புலிகளை மட்டும் தாக்கினர் என்று கேட்டபோது அதற்கு சில்வாவால் பதிலளிக்க முடியவில்லை.

அந்தக் கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல், நாங்கள் சிறிய குழுக்களாக செயல்பட்டோம், தந்திரங்களை மாற்றினோம் என்று கருணாநிதி பாணியில் சம்பந்தா சம்பந்தமே இல்லாமல் பதிலளித்தார்.

பின்னர் பிரபாகரன் குறித்த கேள்வியை ஒரு வெளிநாட்டு ராணுவ அதிகாரி கேட்டார். அவர் பேசும்போது, ராணுவ வாகனம் ஒன்றில் தப்பிக்க முனைந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2009 மே 18ம் நாள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே என்று கேட்டார்.

அதற்கு சில்வா, முன்னதாக அவ்வாறு அறிவிக்கப்பட்டது உண்மையே. ஆனால் அவர் அடுத்த நாளே கொல்லப்பட்டார் என்றார். பிரபாகரன் கொல்லப்பட்டது எப்போது என்பதை அவரால் தெளிவாக சொல்ல முடியவில்லை.

இந்திய அமைதி காக்கும் படையின் தளபதியாக இலங்கையில் முன்பு பணியாற்றிய முன்னாள் இந்திய இராணுவ அதிகாரி ஜெனரல் அசோக் மேத்தா, வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கேட்டார்.

ஆனால் அதற்குப் பதிலளிக்க சில்வா மறுத்து விட்டார். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் அதிகாரம் எமக்கு கிடையாது.

தற்போதைய சூழ்நிலையில் இந்த கேள்விக்குப் பதிலளிப்பது என்பது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பாக நான் எதுவும் சொல்வதற்கில்லை. குவிரைவில் இந்தக் கேள்விக்கான விடை அனைவருக்கும் கிடைக்கும் என்றார் சில்வா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக