ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சீமானை ஓரங்கட்ட நடக்கும் சதிகளில் இலங்கை அரசும் இணைகிறது

எதிரியை வீழ்த்த எந்த ஆயுதத்தையும் தூக்கலாம் என்பது போர் முறைக்கு கூட பொருந்தாத தியரி. ஆனால் சீமானை காலி செய்வதற்காக சிலர் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாமே புடவையும் சுரிதாருமாக இருப்பதுதான் சோகம்.


பிரண்ட்ஸ் விஜயலட்சுமியின் விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியிருக்கிற இந்த நேரத்தில் மேலும் ஒரு வழக்கு சீமானை சுற்றி பின்னப்படலாம் என்கிறது நம் காதுக்கு வந்த ரகசிய சோர்ஸ் ஒன்று.

தம்பி படத்தில் பூஜாவை நடிக்க வைத்திருப்பார் சீமான். ஒரு நடிகைக்கும் இயக்குனருக்குமான உறவு அதோடு முடிந்து போயிருக்கும். அப்படம் வெளிவந்தும் பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் தனது சொந்தங்களை பார்க்க போயிருந்தாராம் பூஜா. அங்கு வைத்து அவரிடம் ஒரு கட்டாய புகார் எழுதி வாங்கியிருக்கிறதாம் இலங்கை அரசு.

அதில் பூஜா சீமானை ஒரு குணக்கேடர் என்று சித்தரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் சில தினங்களில் இந்த விவகாரமும் விஜயலட்சுமியின் புகாரோடு இணைந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறாரோ சீமான்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக