ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தொண்டர்கள் வற்புறுத்தியதால் நகை அணிகிறேன்-ஜெயலலிதா


சென்னை: நீங்கள் நகை அணிய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் தீக்குளிப்போம் என்று அதிமுக உடன்பிறப்புகள் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால்தான் நான் நகை அணிய ஆரம்பித்துள்ளேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
3வது முறையாக முதல்வராகியுள்ள ஜெயலலிதாவிடம் சில மாற்றங்கள் தென்படுகின்றன. முன்பெல்லாம் அவர் நகை அணிய மாட்டார். ஆனால் இப்போது காதில் தோடு போட்டுக் கொண்டுள்ளார்.


இன்று செய்தியாளர்களை ஜெயலலிதா கோட்டையில் சந்தித்தபோது இதை ஒரு நிருபர் சுட்டிக் காட்டி திடீரென நகை அணிவது ஏன் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா,

1997-க்கு பிறகு நகைகளை அணிவதை விட்டு விட்டேன். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் என்னை சந்திக்கும் போதெல்லாம் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார்கள். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றதும் தொண்டர்கள் என் வீட்டு முன்பு குவிந்தார்கள். அப்போது உடன்பிறப்புகள் நான் நகை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். நீங்கள் ஏன் நகை அணியாமல் இருக்கிறீர்கள். நகை அணியாவிட்டால் தீக்குளிப்போம் என்று கூறினார்கள். எங்கள் கட்சி தொண்டர்கள் சொன்னதை செய்து விடுவார்கள்.

ஒரு பெண் தொண்டர் நாக்கை அறுத்துக் கொண்டார். இன்னொருவர் கை விரலை துண்டித்துக் கொண்டார். எனவே தொண்டர்கள் விருப்பத்துக்கு ஏற்று காதில் தோடு அணிந்து இருக்கிறேன். நாக்கை அறுத்துக்கொண்ட பெண்ணுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து இருக்கிறேன். சில பத்திரிகைகளில் இது போன்ற செயல்களை நான் ஊக்கப்படுத்துவதாக எழுதுகிறார்கள். அது உண்மை இல்லை. அந்த பெண் கணவரால் கைவிடப்பட்டவர். 2 குழந்தைகள் உள்ளன. அவருக்கு வருமானம் எதுவும் இல்லை. எனவே அரசு வேலை கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றார் ஜெயலலிதா.

இன்று நடந்த இலவச அரிசி வழங்கும் திட்டத் தொடக்க விழா மிக எளிமையாக அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் ஜெயலலிதாவிடம் கேட்டபோது,

அனைத்து அரசு விழாக்களும் இதுபோல எளிமையாகத்தான் நடக்கும். வீண்-ஆடம்பரமாக செலவு செய்து அரசு விழாக்களை நடத்தக்கூடாது என்பது இந்த அரசின் கொள்கை. அடுத்து தொடரும் திட்டங்களுக்கான விழாவும் இதுபோல் எளிமையாக நடைபெறும் என்றார்.

டிஜிபி நடராஜுக்கு மீண்டும் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், நேற்றுதான் தீர்ப்பு வந்துள்ளது. அதுபற்றி அரசு பரிசீலித்து வருகிறது. ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

கருணாநிதியின் குழந்தைத்தனம்:

தனது கவிதையை எடுத்து விட்டு புத்தகங்களை வெளியிடலாமே என்ற கருணாநிதியின் பேச்சு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, அவரது கருத்து குழந்தை தனமானது. சமச்சீர் கல்வியை தரமானதாக உயர்த்தவேண்டும் என்பதற்காக அமைச்சரவை கூட்டத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது. அதை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

இலவச டிவி, இலவச கான்க்ரீட் வீடுகள் திட்டம் தொடருமா என்ற கேள்விக்கு ஆளுநர் உரையில் தெரிய வரும் என்றார் ஜெயலலிதா. அதேபோல அண்ணா பல்கலைக்கழகங்கள் இணைக்கப்படுமா என்ற கேள்விக்கும் அதே பதிலைத் தெரிவித்தார் ஜெயலலிதா.

அரசு கஜானா எப்படி உள்ளது என்ற கேள்விக்கு, இப்போது கூற முடியாது. ஆளுநர் உரையிலும், மீதியை பட்ஜெட்டிலும் தெரிவிப்போம் என்றார் ஜெயலலிதா.

மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இல்லை என்றார் ஜெயலலிதா. மேலும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்படி கூடுதலாக 5000 மெகாவாட் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் விளக்கினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக