ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்தம்மா ஜெயிச்சா தமிழ் நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று ஒரு காலத்தில் கூறியவர்தான் இவர்.

                      இதை பற்றி வாசகர் கருத்து
அதேரஜினி இன்று "முதல்வர் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதன் மூலம், தமிழகம் காப்பாற்றப்பட்டுள்ளது' என, நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார

ரஜனி நாட்டுக்கு என்ன செய்தார் என்று முதல்ல யோசிங்க ? அவர் ஒரு சந்தர்பவாதி
அம்மா தாயே மாரியம்மா இப்புடி மாறி மாறி கொல்றங்களே நீ இருக்கியா இல்லையா ?.....


இவரு கை தேர்ந்த அரசியல் வாதிதான். அடேங்கப்பா......என்ன அந்தர் பல்டி "ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்" இந்த அர்த்தம் உங்களுக்கு புரியும

லேடி ஹிட்லர் ஆட்சி நடக்குது தமிழ்நாட்டில். இனி தமிழக மக்களுக்கு 5 வருடங்களுக்கு விடியலே கிடையாது. எதிர்காலம் உங்கள் வரலறை இப்படிதான் படிப்பார்கள் "தமிழகத்தில் சர்வதிகார ஆட்சி நடத்தியது இலை கூட்டம்"
தமிழ்நாட்டை காப்பாற்ற எங்களுக்கு தெரியும்..நீ போய் கர்நாடகாவ காப்பாத்த வழிய பாரு ....உன் நடிப்பால் தமிழர்களை எமாற்றாதே. உன் சொத்து குவிப்பு வங்கி முதலீடு மற்றும் சிறு தொழில்கள் எல்லாம் கர்நாடகாவில் தானே. நீ தமிழர்களால் வாழ்ந்து விட்டு, வாழவைப்பது உன் இனத்தாரை தானே. தமிழர்களுக்கென நீ என்ன செய்தாய். நான்கு பேரை இல்லை நாற்பதயிரம் பேரை சோம்பேறியாக்கியிருப்பாய்....உனக்காக உயிர வேற விட்டான் ஒரு தமிழன். அவன எல்லாம் திட்ட எங்கிட்ட வார்த்த இல்லய்யா....உன்ன வாழ வச்சிட்டு உனக்காக உயிரயும் விட்டுட்டான்.....நீ கேவலம் தமிழர்களிடம் நடித்ததை தவிர வேற

என்ன..என்னை பொறுத்தவரை ஒரு வேளை சோற்றுக்கு கயிதின் மீதும் நெருப்பின் மீதும் நடக்கிறானே அவன் தான் உயர்ந்தவன்..........

அது போன வருஷம் இது இந்த வருஷம்... வேணாம் வலிக்குது அழுதுருவேன் .... அடுத்த electionலே மீண்டும் அம்மா ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்டை அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்லுவேன்... நான் ஒரு தடவை சொன்னா அது ஒரு electionக்கு மட்டும் தான்... பாச தலைவிக்கு பாராட்டு விழா நடத்தி அதை ஜெயா டிவி லே போடணும் சிங்கப்பூர் லே இருந்து வந்ததும்... நான் பிழைக்க வேணாமா என்ன?

ரஜினி இந்த நேரத்தில் தன் மேல ரசிகர்கள் கொண்டுள்ள அனுதாபத்தை இழக்க வேண்டாம்..இப்படியெல்லாம் பேசி,பினாத்தி.. அம்மாவிடம் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பது நல்லது.. முன்பு ஒருமுறை KKSSR தன் மனைவியுடன் விழுந்து கும்பிட்டதை பத்திரிக்கைகளுக்கு கொடுத்து அசிங்க படுத்திய குணம் கொண்டவர்தான் இந்த அம்மா

ஹலோ சார், உங்களுக்காக எத்தனை ஆயிரம் பேர் பிரார்த்தனை பண்ணாங்க அவங்களுக்கு நன்றி சொல்லுங்க மொதல்ல. அப்பறம் அரசியல் செய்யலாம் - இந்த ரசிகர்களை சொல்லணும் வேலை கெட்டு போய் அபிஷேகம் தியானம் செஞ்சு தன்னை தானே அழிச்சிக்கும் வரை. இதெல்லாம் தொடரும் - வாழ்க இந்தியா

இப்படி போனில் பேசியதை 'அரசு அறிக்கையில்' போட்டு விடுவார்கள் எனத் தெரியாமல் பேசி விட்டார். இது தெரிஞ்சு அவர் உடம்புக்கு மீண்டும் முடியாமல் போய் விடப் போகிறது!

இதுதான் சந்தர்ப்பவாதம் என்பது. ரஜினியும் ஒரு வியாபாரிதானே. சென்ற ஆட்சியில் கலைஞரின் தயவு தேவை. அவர் பின்னால் தெரிந்தார். இப்பொழுது அங்கு போனால் ராணா பணால் ஆகிவிடும் என்று தெரியும். அதனால் இப்பொழுது இப்படி ஒரு நடிப்பு. இருந்தாலும் கலைஞர் இவர் மேல் அரசியல் தாண்டியும் ஒரு நட்பு வைத்திருந்தார். அதனால தான் இவர் சென்னையில் மருத்துவ மனையில் இருந்த பொழுது இந்த தள்ளாத வயதிலும் நேரில் சென்று பார்த்தார். அந்த சந்திப்பு புகைப்படம் கூட பத்திரிகையில் வர வேண்டாம் காரணம் ரஜினியின் அன்றைய நிலைமையை அவர் ரசிகர்கள் பார்க்கவேண்டாம் என்று ரஜினியின் மகள் ஐஸ்வர்யா கேட்டு கொண்டதற்காக பத்திரிகையில் வரவில்லை. அப்படிப்பட்ட ஒரு தலைவரின் நட்பை புரிந்து கொள்ளாமல் இப்படி நடந்து கொண்டது சரியில்லை. அது மட்டுமல்ல ஜெயலலிதா என்றுமே நண்பகத்தன்மைக்கு உரியவர் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் பேசி கொண்டதை இப்படி செய்தி பத்திரிக்கைக்கு கொடுத்து தனக்கு புகழ் தேடிக்கொள்வது மிகவும் கீழ்த்தரமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக