ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கனிமொழி, ராஜாவுக்கு முழுநேர சிறைவாசம்

 
  


முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி, மும்பை தொழிலதிபர்கள், மத்திய அரசின் உயரதிகாரிகள் போன்றோரை, ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் வைத்து, பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய, ஓ.பி.சைனி தலைமையில் இயங்கி வரும் சி.பி.ஐ., கோர்ட், கோடை கால விடுமுறைக்காக நேற்றிலிருந்து, வரும் ஜூலை 4 வரை மூடியிருக்கும்.

"ஸ்பெக்ட்ரம்' ஊழலில், குற்றம் சாட்டப்பட்ட அரசியல் பிரமுகர்களும் மற்றும் பலரும் காலையிலும், மதியமும் கோர்ட்டில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுடன் நேரத்தை கழித்து வந்தது, இனி மூன்று வாரங்களுக்கு முடியாமல் போய்விடும். இந்த கோர்ட் விடுமுறை நாட்களில், 24 மணிநேரமும் அவர்கள் சிறையிலேயே இருக்க வேண்டும்.
கடந்த ஒரு மாதகாலமாக, பாட்டியாலா ஹவுசில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில், இந்த வி.ஐ.பி.,க்கள் தினசரி வந்து போவதால், பத்திரிகையாளர்கள், வக்கீல்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டம் அதிகரித்ததால், கோர்ட்டில் கூடுதலாக "ஏசி' வசதிகள் செய்யப்பட்டன.

காலை 10 மணிக்கு, நீதிபதி சைனி, கோர்ட்டிற்கு வருவதற்கு முன்பே, இந்த பிரமுகர்கள் போலீசாரால் ஆஜர் படுத்தப்படுவார்கள். மதிய உணவு இடைவேளையின் போது, கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு பகல் உணவு வழங்கப்படும்.கோர்ட், மீண்டும் பகல் 2 மணிக்கு தொடங்குவதற்கு முன், அவர்கள் உள்ளே அழைத்து வரப்படுவார்கள். கோர்ட்டின் அலுவல்கள் 3:30 மணிக்கு முடியும் போது, அவர்கள் தனி வேன்களில் 15 கி.மீ., தொலைவில் உள்ள மேற்கு டில்லியின் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

விடுமுறைக்கு முன், கோர்ட்டின் கடைசி நாளான நேற்று, இந்த பிரமுகர்களின் குடும்பத்தினர் பலரும் வந்து அவர்களுக்கு பிரியாவிடை கொடுத்தனர். கோர்ட் விடுமுறை நாட்களில், குடும்பத்தினர் இவர்களை பார்க்க வேண்டுமென்றால், சிறைத் துறை அதிகாரிகளின் அனுமதியோடு தான் சில நிமிடங்கள் சந்திக்க முடியும். ஆனால், கோர்ட்டில் இவர்களின் குடும்பத்தினர் சுலபமாக சந்திக்க முடியும். மணிக்கணக்கில் பேசவும் முடியும்.

நேற்று காலை 10 மணிக்கெல்லாம், கனிமொழியின் தாயார் ராஜாத்தி வந்துவிட்டார். திகார் சிறைக்கு அருகே, ரயில்வே மேம்பாலம் பழுதடைந்துள்ளதால், கைதானவர்களை கோர்ட்டுக்கு கொண்டு வரும் வேன்கள், 10:30 மணிக்கு வந்தன. ராஜாத்தி, அரவிந்தன், மகன் ஆதித்யா, நாள்முழுவதும் கனிமொழியுடன் பொழுதைக் கழித்தனர்.ராஜா, தன் மனைவி பரமேஸ்வரியுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

சென்னையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும், "கலைஞர் டிவி' நிர்வாக இயக்குனர் சரத்குமாரின் மகன் சித்தார்த், மகள் சாக்ஷி, நீண்ட நாள் கழித்து தந்தையுடன் பல மணி நேரம் உடனிருந்தனர். 10 வயதான சித்தார்த், தனது தந்தையை கட்டிப்பிடித்த போது சரத், கண்கலங்கினார்.டி.பி.ரியாலிடி அதிபர் சாகித் பல்வாவும், சினிமா பட அதிபர் கரீம் மொரானி ஆகியோரும் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை கழித்தனர்.

மதியம் கோர்ட் கூடியதும், கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் ஜாமினுக்காக டில்லி ஐகோர்ட்டில் வாதாடிய பிரபல வக்கீல் அல்டாப் உசேன், கனிமொழியுடன் அரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். கனிமொழியின் ஜாமின் மீது, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு குறித்து, முறையீடு செய்யும் போது, தான் வைக்கப்போகிற வாதங்கள் குறித்து கனிமொழியுடன் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, அல்டாப் உசேன், சரத்குமாரோடும், முன்னாள் அமைச்சர் ராஜாவோடும் பேசிக் கொண்டிருந்தார்.

மாலை 5 மணிக்கு கோர்ட் முடிந்தவுடன் கனிமொழி, ராஜா மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், கோர்ட்டில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு, வேன்கள் மூலம் திகார் சிறைக்கு சென்றனர்.
கனிமொழி, கோர்ட்டிலிருந்து அழைத்துச் செல்லபட்ட போது, ராஜாத்தி கண்கலங்கினார். பல்வாவின் குடும்பத்தினர் பலர் கண்ணீர் விட்டு அழுதனர்.

கோர்ட் விடுமுறைக்காக மூடுவதற்கு முன் நீதிபதி சைனி, பல்வாவின் மனுவை தள்ளுபடி செய்து அவருக்கும், வினோத் கோயங்காவுக்கும் கோர்ட் நேரத்தை வீணடித்ததற்காக, அபராதம் வைத்தார்.பல்வா, கோயங்கா ஆகியோர் இருவரும், தங்களது எடிசாலட் கம்பெனியின் பங்குதரார்களின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, மும்பைக்கு ஜூன் 15ம் தேதி செல்வதற்கு கோர்ட்டில் அனுமதி கேட்டிருந்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்து, மும்பை செல்வதற்கு தனது அனுமதியை மறுத்தார்.

மூன்று தலைமுறை சோகம்: மகள் கனிமொழியை பார்ப்பதற்காக கோர்ட்டுக்கு வந்த ராஜாத்தி, அம்மாவை பார்க்க வந்த ஆதித்யா என, மூன்று தலைமுறையும் சோகத்தில் காணப்பட்டது. கோர்ட்டில், கண்களில் கண்ணீருடன் இருந்த கனிமொழியின் மடியில், மகன் ஆதித்யா நீண்ட நேரம் அமர்ந்திருந்தார்.

-






வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (65)
Ayyappan Surya - Singapore City,சிங்கப்பூர்
2011-06-11 15:27:24 IST Report Abuse
வாழ்க கனிமொழி
  • Rate it:
  • 1
  •  
  • 7
Share this comment
ஆரூர் ரங - chennai,இந்தியா
2011-06-11 14:48:48 IST Report Abuse
கருப்பில் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டதெல்லாம் அந்தக்காலம்! இப்போதைய Fashion வெள்ளையிலேயே வாங்குவது!பல வழிகள் உண்டு. 1.மதிப்பே இல்லாத மன்னாரம் & கம்பெனி துவக்கி அதன் அரையணா பொறாத பங்குகளை அநியாய விலைக்கு ( லஞ்சத்துக்கு பதிலாக ) தலையில் கட்டுவது! 2.லஞ்சத்தை வங்கி மூலம் வெள்ளையில் கடனாகக் கொடுப்பது! அதனை குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப வாங்காமல் விடுவது ( காலம் கடந்தால் கேஸ் செல்லாது.வசூல் பண்ண முடியாது !). இந்த இரண்டையும் கலந்த லஞ்சம் நமது விஞ்ஞான ஊழல் மன்னனின் மகள் செய்தது. ஏதோ தான் நல்லவர்போல் அப்பீலுக்குப் போவது அசிங்கம்! இந்த அப்பீலை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து ,பல கோடி அபராதமும் விதிக்கவேண்டும்!
  • Rate it:
  • 23
  •  
  • 0
Share this comment
Bharathi - erode,இந்தியா
2011-06-11 14:24:33 IST Report Abuse
உங்களுக்கு கனிமொழி & கருணாநிதி பற்றிய செய்தியை தவிர வேறு எந்த செய்தியும் கிடைக்கவில்லை போலும். நாட்டில் எவ்வளவோ சம்பவங்கள் நடக்கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு இந்த செய்தியை மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகிறேர்களே உங்களுக்கு வேறு வேலை இல்லையா. ஆளும் கட்சிக்கு துதிபாட வேறு எந்த செய்தியும் உங்களுக்கு கிடைக்கவில்லையா. இதற்கு நீங்கள் அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலர் பதவி வாங்கிக் கொள்ளுங்கள்.
  • Rate it:
  • 20
  •  
  • 25
Share this comment
rajasji - chennai,இந்தியா
2011-06-11 14:18:56 IST Report Abuse
படுத்து உருள பட்டு மெத்தைகள் பல இருந்தும் ....கனி கட்டாந் தரையில் ஏன் படுத்து தவிக்கிறாள் ?....அத்தரும் ஜவ்வாதும் பூசிக் கொண்டு வீசிடும் குளிர் காற்றில் ஆனந்தத்தை அனுபவிக்க வேண்டியவள் .....புழுக்கத்தில் கொசுக்கடியில் கும்மிருட்டில் ஒத்தையில் ஏன் வேதனையில் விம்முகிறாள் ?...பறவை என்ன தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் இரவு வந்ததும் தன்னுடைய கூட்டுக்குத் தானே செல்ல வேண்டும் ! அந்த நேரம் வந்ததும் கனி இன்று தன்னுடைய கூட்டுக்குள் கிடக்கிறது ! அழாதே கனி !....நீ செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவி ! உன்னைப் பார்த்தாவது உன் கண்ணீரைப் பார்த்தாவது உன் அப்பன் திருந்தட்டும் !!! @ rajasji
  • Rate it:
  • 40
  •  
  • 3
Share this comment
Victor Christopher - sanaa,ஏமன்
2011-06-11 14:00:07 IST Report Abuse
Let them leave the prison by hand overing the money with penality. Who will do that ???
  • Rate it:
  • 6
  •  
  • 2
Share this comment
A.NAWAB JHAN, TRICHY. - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
2011-06-11 13:51:36 IST Report Abuse
இவர்களுக்கு எல்லாம் மாமா வேலை பார்த்த நீரா ராடியவை கைது செய்யாதது ஏன்?
  • Rate it:
  • 17
  •  
  • 0
Share this comment
sameer - hyderabad,இந்தியா
2011-06-11 13:28:40 IST Report Abuse
ராஜா முகத்துல ராஜ களை தெரியுதில்ல ..............
  • Rate it:
  • 15
  •  
  • 0
Share this comment
sameer - hyderabad,இந்தியா
2011-06-11 13:27:05 IST Report Abuse
செம்மொழியான கனிமொழியாம் ........
  • Rate it:
  • 6
  •  
  • 7
Share this comment
umar - madurai,இந்தியா
2011-06-11 13:20:16 IST Report Abuse
இப்பலாம் நியூஸ் ஐய விட நீங்க எழுதிற சோம்மேன்த்ஸ் தான்பா ரெம்ப சுவாரஸ்யம்
  • Rate it:
  • 8
  •  
  • 1
Share this comment
poosaidurai - sathanoor, ramanathapuram,இந்தியா
2011-06-11 12:29:27 IST Report Abuse
கனிமொழியின் கண்ணீர்த்துளிகள் மன சுமையை தாங்கிகொள்வது தாயும் மகனும் என்ற தினமலர் கட்டுரை உண்மையிலே மனதை வருத்தமடைய செய்கிறது. இதை எல்லா அரசியல் கட்சிகளை சார்ந்த தலைவர்கள் உணர்ந்தால் அவர்களது குடும்பங்கள் இதுபோன்ற துன்பத்தை தவிர்க்கலாம். மந்திரங்களை சொல்லி மனதை திடபடுத்திகொள்ளுங்கள். உங்கள் பிரச்னை விரைவில் விடுதலை பெற உங்களுக்காக பிராத்திக்கிறேன்
  • Rate it:
  • 4
  •  
  • 12
Share this comment
Muthukumar - Coimbatore,இந்தியா
2011-06-11 12:20:57 IST Report Abuse
கோர்ட் தயவு செய்து இவர்கள் மீது எக்காரணமும் கொண்டு பரிவு கட்டகூடாது. இவர்கள் எல்லாம் மிக பெரும் நாடக நடிகர்கள், சந்தர்ப்பவாதிகள், சுயநலவாதிகள். அதுமட்டும் அல்லாது தினமலரும் இவர்கள் எதோ பாவப்பட்ட ஜென்மம் போல newsai போடவேண்டாம் என்று கேட்டுகொள்கிறேன். தற்போது மக்கள் விருப்பமே இவர்கள் மீது இன்னும் தண்டனை கடுமையக்கபடவேண்டும் என்பதே ஆகும்.
  • Rate it:
  • 17
  •  
  • 1
Share this comment
Indhean - Chennai,இந்தியா
2011-06-11 12:04:36 IST Report Abuse
திருடும்போது நல்ல சந்தோஷமா இருந்துதா? ஊரெல்லாம் சொத்து வாங்கும்போது சந்தோஷமா இருந்துதா? ஊழல் பணத்தை எண்ணமுடியாம கஷ்டப்பட்டபோது சந்தோஷமா இருந்துதா? சுத்தி சுத்தி ஆப்ப வெச்சுக்கிட்டு இப்ப குத்துதே குடையுதேன்னு அழுதா எவன் கேப்பான். எத்தனை பேர் புள்ள குட்டிகள் வாழ்க்கை நாசமாப்போச்சு? எத்தனை இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், அப்ப என்ன புடுன்குநீங்க? பெரும்பாலும் தமிழர்கள் மற்றவன் வாழ்வில் படும் துன்பத்தை இன்பமாக பார்க்கும் கேடு கேட்ட புத்தியில்லாதவன். ஆனால் முதன் முறையாக கலைஞர் குடும்பம் படும் துன்பத்தை இன்பமாக பார்க்கும் கேடு கேட்ட புத்தியை கலைஞரிடம் இருந்து எங்களுக்கும் தொற்றிவிட்டதோ?
  • Rate it:
  • 23
  •  
  • 1
Share this comment
Arcot Nawab - Helsinki,பின்லாந்து
2011-06-11 11:44:00 IST Report Abuse
"உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான்" என்ற பழமொழியை கொஞ்ச நாட்களாக நான் கமெண்ட்ஸ் பகுதியில் நான் பார்க்கவில்லை.
  • Rate it:
  • 4
  •  
  • 1
Share this comment
Senthil Kumar Subramaniam - tup,இந்தியா
2011-06-11 11:29:04 IST Report Abuse
சாதிக் பட்சா எப்படி இறந்தார்? அவர் குடும்பத்தை பத்தி யாரும் இப்போ யோசனை பண்ண மாட்டார்கள். துணை போனதற்கே இந்த தண்டனை. தப்பு பண்ணியவர்க்கு ???
  • Rate it:
  • 19
  •  
  • 1
Share this comment
Manickam - Singapore,சிங்கப்பூர்
2011-06-11 11:27:34 IST Report Abuse
போனது திரும்பாது நான் சொல்லுறது அடிச்ச கோடிகளை, பேசி ஒன்னும் நடக்காது, எல்லாம் அரசியல்வாதிங்க கையில்தான் இருக்கு
  • Rate it:
  • 8
  •  
  • 1
Share this comment
Tamilulavan - Chennai,இந்தியா
2011-06-11 11:15:15 IST Report Abuse
ஐஐயோ அது மானாட மயிலாட அல்ல... கூத்தாட குரங்காட.. அந்த நிகழ்ச்சியில் நடுவரான கற்புக்கரசி ஒருவர், பங்கேற்று நம் நாட்டின் பண்பாட்டை, கலையுணர்வை உலகுக்கு எடுத்தியம்பும் நடன புயல்களை பார்த்து அடிகடி ஊக்கப்படுத்த உதிர்க்கும் வாக்கியம் " நீங்க அப்படியே கிழிசுட்டீங்க" போங்க என்பதுதான்... அதனால்தான் அது கூத்தாட குரங்காட!!
  • Rate it:
  • 13
  •  
  • 1
Share this comment
muthu - singapore,சிங்கப்பூர்
2011-06-11 10:27:04 IST Report Abuse
kankalil enna eerame ?nenjinil enna baarame? kodi kodi yai suruttayil inithatha?
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
bathurzaman - ilayangudi ,இந்தியா
2011-06-11 10:18:26 IST Report Abuse
பதர் சமன் சாத்தனி. கனிமொழி செய்தது தேச துரோகம்
  • Rate it:
  • 9
  •  
  • 1
Share this comment
T....C.... - TEXAS,யூ.எஸ்.ஏ
2011-06-11 10:17:28 IST Report Abuse
"இதயம் இனித்தது.......கண்கள் பனித்தன....." அன்று மு.க. விற்கு , இன்று நமக்கு
  • Rate it:
  • 16
  •  
  • 1
Share this comment
T....C.... - TEXAS,யூ.எஸ்.ஏ
2011-06-11 10:10:31 IST Report Abuse
அடிச்சது கூட்டு கொள்ளை. இதுல என்ன செண்டிமெண்ட் வேண்டி கிடக்குது...அம்புட்டு பேத்தையும் சேர்த்து தூக்கி உள்ள போடணும். திருட்டு கும்பல் , கொள்ளைக்கார கூட்டம்....
  • Rate it:
  • 15
  •  
  • 1
Share this comment
sakthi - nagpur,இந்தியா
2011-06-11 10:07:19 IST Report Abuse
கனிமொழி ஆடிய ஆட்டம் என்ன கொஞ்சம் நெஞ்சமா? ஊர் முழுக்க மக்களை மிரட்டி வாங்கிபோட்ட நிலமெல்லாம் இப்ப யாருக்குன்னு தெரியலப்பா!
  • Rate it:
  • 15
  •  
  • 1
Share this comment
M.Kumar - chennai,இந்தியா
2011-06-11 09:46:57 IST Report Abuse
I m not DMK OR ADMK But i pity on kanimozhi and her mother.When one lady is holding 60% stake in Kalainar TV she has been pardoned.Atleast her successors stalin,azhagiri or selvi should have been questioned and arrested.(ie even selvi should not have beeen spared.as daughters are having equal rights nowadays.) So this is the one idea of azhagiri to stop kani to shine .in politics
  • Rate it:
  • 9
  •  
  • 1
Share this comment
nellai muthuvel - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2011-06-11 09:28:30 IST Report Abuse
"இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" "மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார் தம் "மக்கள்" நலம் ஒன்றே தான் மனதில் கொள்ளுவார்" "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது!" " பார் மகளே பார் நீ இல்லாத மாளிகையை பார் மகளே பார், உன் நிழல் இல்லாமல் வாடுவதை பார் மகளே பார்" எல்லா பாட்டும் நினைவுல வந்து தொலைக்கிறது. பிக் பாக்கெட் அடிக்கும் பிச்சம்மாவுக்கும், கள்ளத்தனமாக லஞ்சம் வாங்கிய கனிமொழிக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. பெண் என்றும், பிள்ளை பெற்றவர் என்றும், பரிவு காட்ட. அரசு அதிகாரியாக பணியாற்றிய(?) எத்தனையோ லஞ்ச லாவண்யாக்களை அரசு கைது செய்து சிறையில் அடிக்கவில்லையா? மக்களின் செந்நீர் சுரண்டும் இவர்களின் கண்ணீரை கடவுளே மன்னிக்க மாட்டார். நெல்லை முத்துவேல், அபு தாபி.
  • Rate it:
  • 12
  •  
  • 1
Share this comment
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2011-06-11 09:20:55 IST Report Abuse
அய்யா டொரோண்டோ ரவி அவர்களே, தயவு செய்து கொஞ்ச நேரம் மட்டும் என் கூட உண்மை பேசுவீர்களா? நீங்கள் எத்தனை ஆண்டுகளாக டொராண்டோவில் பணியாற்றுகிறீர்கள். ஒரு நாளில் சராசரி எத்தனை மணி நேரம் உழைக்கிறீர்கள்? உங்களது ஆண்டு வருமானம் என்ன? உங்களுக்குள்ள இன்றைய சொத்து மதிப்பு என்ன, எத்தனை லட்சங்கள் அல்லது எத்தனை கோடிகள்? கனிமொழி எத்தனை ஆண்டுகளாக அரசியல் பணி புரிகிறார்? கோவை பரூக் பாண்ட் ஸ்பென்சர் கட்டிடத்தின் மதிப்பு, மற்றும் டைடல் பார்க்குகளின் மதிப்பு , ஊட்டி வின்ட்சர் எஸ்டேட்டின் மதிப்பு என்ன என்றாவது உங்களுக்கு தெரியுமா? கனிமொழியின் மகன் ஆதித்யன் ஒரு டி வி சானலின் உரிமையாளர் ( முதலாளி ) என்பதாவது உங்களுக்கு தெரியுமா, அல்லது அந்த மகன் ( ஐந்து வயதுக்குள் ) ஆறு படங்களின் தயாரிப்பாளர் என்பதாவது உங்களுக்கு தெரியுமா? கனிமொழி யாரையும் கொலை செய்யவில்லை என்று கூறுகிறீர்கள், இது உண்மையா இல்லையா என்பதை எதிர்காலம் தீர்மானிக்கட்டும். தா.கி மற்றும் மதுரை பத்திரிகை அலுவலகத்தில் மூவர் உயிரோடு எரிப்பு போன்றவை கூட "குறிப்பிட்ட ஒருவர்" செய்யவில்லை என்றுதான் திமுக கூறுகிறது. உண்மையில் யார் செய்தார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர். கனிமொழி யாரை கொலை செய்தாரோ இல்லையோ, கனியும் அவரது நண்பரும் சேர்ந்து நாட்டு பொருளாதாரத்தை கொன்றுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை.
  • Rate it:
  • 28
  •  
  • 2
Share this comment
ravi kanth - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-06-11 08:59:13 IST Report Abuse
கூடா நட்பு என்று கலைஞர் சொன்னது கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு மிக மிக பொருத்தம்
  • Rate it:
  • 15
  •  
  • 2
Share this comment
Tamilnesan - Maskat ,ஓமன்
2011-06-11 08:54:19 IST Report Abuse
நீரா ராதியா போன்ற ப்ரோக்கர்கள் மந்திரிகளை நியமிக்கும் அளவுக்கு இந்திய ஜனநாயகம் காங்கிரஸ் ஆட்சியில் கேவலமாக போய் விட்டது. இந்த அட்டகாசங்களுக்கு வரும் பொது தேர்தலில் இந்திய மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். எப்படி தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் திமுக காணாமல் போனதோ, அது போல் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விடும். இது உறுதி.
  • Rate it:
  • 13
  •  
  • 1
Share this comment
raghavan - chennai,இந்தியா
2011-06-11 08:49:11 IST Report Abuse
போதும் இந்த விளையாட்டு. ஒரு அரச குடும்பம் இப்படி அவஸ்தை படுவது காண சகிக்கவில்லை. அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் அவர்கள் இதுவரை கொள்ளை அடித்த பணத்தை பட்டியலிட்டு எல்லா பணம் மற்றும் சொத்துகளையும் வட்டியுடன் திருப்பி கட்ட வேண்டும். இனி அரசியிலில் இருப்பதில்லை என்றும் எதிலும் எப்போதும் ஊழல் செய்ய மாட்டோம் என்றும் எழுதி தர வேண்டும்.
  • Rate it:
  • 18
  •  
  • 1
Share this comment
Sivakumar S - singapore,இந்தியா
2011-06-11 08:24:42 IST Report Abuse
"பேராசை பெரும் நஷ்டம்"..................... 20 % உள்ளே 60 % எங்கே? சிவகுமார் ..சிங்கப்பூர்.
  • Rate it:
  • 11
  •  
  • 1
Share this comment
madhu meena.s - delhi,இந்தியா
2011-06-11 08:23:05 IST Report Abuse
ஓவரா ஸீன் போடதிங்க அம்மணி.... உங்களுக்கு ஜெயில்ல என்ன குறை...... வேளா வேளைக்கு சாப்பாடு,இருக்க ஒரு எடம், டைம் பாசுக்கு புக்ஸ்......... இதுக்கே இந்த கூப்பாடா?...... இன்னும் தண்டனை கிடைச்சிட்டா? !!!!!!......... ஏன், பணம்,பணம்னு கொள்ளையடிச்சிட்டு இருந்தப்போ புள்ளைய மறந்திட்டயாக்கும் ?...... இப்போ தான் பாசம் பொத்துக்கிட்டு வந்திருச்சோ?...... உன் குடும்பம் கொள்ளையடிச்சது கூட தப்பில்ல....... ஆனா அளவே இல்லாம கொல்லையடிசிங்க பாரு, அது தான் தப்பு.....ஊரையே சுருட்டி உலையில போட்டுடிங்களே......ஒவ்வொரு வருசமும் ஊருக்கு வரும் போதும், சென்னைல ,பிச்சகாரங்க மற்றும் ரோடு சைடுல படுத்திருகிரவங்க குறையவே மாட்டிங்கு.... ஆனா.. வருஷா வருஷம் உன் குடும்பம் மட்டும் மேல தக தகன்னு ஏறிகிட்டே போறீங்க..... அத டிவி-ல வேற போட்டு காட்டரிங்க...எத்தன பேரு வயிறு எரிஞ்சிருக்கும்..... ஆடம்பரதுக்கும் ஒரு அளவு வேண்டாம்???...... அப்போல்லாம் மாட்டிகிட்டா புள்ள என்ன பீல் பண்ணும்னு யோசிக்கலையாக்கும்?..... எக்கோவ் ........ பேசாம , உன் அப்பன் தான் இதெல்லாம் சொல்லி கொடுத்தாருன்னு உண்மைய சொல்லிரு.... இந்த சைடு உன் அம்மா, நீ, உன் பிள்ள....ஆனா அந்த சைடு....... .அந்த குடும்பத்து ஆளுங்க நல்லா இருக்க உன் புள்ள வாழ்க்கைய பணயம் வைக்காதே..... நல்லா யோசி......
  • Rate it:
  • 21
  •  
  • 1
Share this comment
Venkatachalam - BengaLuru,இந்தியா
2011-06-11 08:07:41 IST Report Abuse
இந்த சிபிஐ தானே கொட்டரோச்சிக்கு உதவியது.
  • Rate it:
  • 9
  •  
  • 0
Share this comment
Prabhakaran Shenoy - cuddalore,இந்தியா
2011-06-11 07:06:41 IST Report Abuse
ஹய் யார் தொந்தரவும் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம்
  • Rate it:
  • 30
  •  
  • 3
Share this comment
parasuraman sharma - jeddah,சவுதி அரேபியா
2011-06-11 13:57:43 IST Report Abuse
வாழ்த்துக்கள்!...
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
parasuraman sharma - jeddah,சவுதி அரேபியா
2011-06-11 13:32:46 IST Report Abuse
ஒரு மாதம் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை வேறே!...
  • Rate it:
  • 2
  •  
  • 1
Share this comment
Kumar K - Chennai,இந்தியா
2011-06-11 07:06:09 IST Report Abuse
'அப்படியே... திகார் ஜெயிலின் தரத்தை பரிசோதித்து அதை மேன்மை படுத்த சென்றிருக்கும் தேச நல சேவகி... வருங்கால தமிழக முதல்வர் கனிமொழி வாழ்க.. வாழ்க' அப்படின்னு ஒரு எக்ஸ்ட்ரா வரி சேர்த்திருந்தா உங்களுக்கு 6G ஸ்பெக்ட்ரம் வரும்போது பங்கு கிடைச்சிருக்குமே ரவி.......
  • Rate it:
  • 67
  •  
  • 4
Share this comment
Sanjay Kumar - Chennai,இந்தியா
2011-06-11 06:53:02 IST Report Abuse
எத்தனை பேர் கண்ணீர் வடிக்க நீங்கள் காரணமாய் இருந்தீர்கள். இன்று ஆண்டவன் உங்களை கண்ணீர் வடிக்க வைத்துள்ளான். உப்பை தின்னவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். விரைவில் காங்கிரஸ் கட்சியினரும் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட வேண்டும். காங்கிரஸ்காரர்களும் விரைவில் திகார் சிறையில் அடைக்க பட வேண்டும்.
  • Rate it:
  • 78
  •  
  • 2
Share this comment
Andrea R - kumari,இந்தியா
2011-06-11 06:49:26 IST Report Abuse
கனிமொழி ஒரு நிரபராதி. இது திட்டமிட்ட அரசியல் சதி. சூரியனை பார்த்து ஏதோவோ கொலைத்து மாதிரி. உண்மை ஒருநாள் வெளிவரும்
  • Rate it:
  • 10
  •  
  • 157
Share this comment
sura - Mannai,இந்தியா
2011-06-11 13:56:21 IST Report Abuse
உங்களுக்கெல்லாம் புத்தி வராதா ?...
  • Rate it:
  • 9
  •  
  • 2
Share this comment
jayes rajan - Coimbatore,இந்தியா
2011-06-11 08:27:08 IST Report Abuse
நீ கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த ஆள்தானே?...
  • Rate it:
  • 8
  •  
  • 2
Share this comment
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-06-11 06:36:28 IST Report Abuse
அப்போ மடியில் இருந்த மகன் என்ன நினைச்சு இருப்பான்,, ஒரு கொள்ளைகாரியோடே மகனா, நானு,, இவங்க பரம்பரைக்கே தான் வெட்கம் மானம் சூடு, சொரணை,, இல்லையே எப்படி நினைச்சா;லும் உருப்பட போறதில்லே,, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்..எனக்கு அரவிந்தனை நினைச்சாதான் பாவமா இருக்கு,,
  • Rate it:
  • 72
  •  
  • 7
Share this comment
parasuraman sharma - jeddah,சவுதி அரேபியா
2011-06-11 13:29:09 IST Report Abuse
சார், அரவிந்தனை நினைச்சா உங்களுக்குப் பாவமா இருக்கு! எனக்கு அவரைப் பார்த்தா பயமா இருக்குது! நீதிபதியும் பயந்துவிடக்கூடாதுன்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்!...
  • Rate it:
  • 10
  •  
  • 2
Share this comment
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-06-11 05:30:41 IST Report Abuse
எங்க நிருபரே உங்களுக்கு வேறே வேலையே இல்லையா, கனி மொழி மடியிலே பையன் தூங்கினான், வாயாலே சோறு சாப்பிட்டான் ,,பாட்டி ஊட்டி விட்டா, இது போன்ற அபத்தங்கள் தான் செய்தியா? செய்த குற்றங்களுக்கு தண்டனை அனுபவிக்கறாங்க, தூக்கி போடுங்க குப்பைகளை. இவங்களுக்கு என்ன அப்படி முக்கியத்துவம் கொடுக்கறீங்க. ஊழல், கொள்ளை அடிச்சவங்களுக்கு இத்தனை பக்கம் வேஸ்ட் பண்ணாதீங்க.
  • Rate it:
  • 129
  •  
  • 3
Share this comment
vadapalani.ranganathan - chennai,இந்தியா
2011-06-11 12:26:15 IST Report Abuse
இதை பார்த்தாவது மற்றவர்கள் திருந்த வேன்டும் என்பதற்காக தான் ....
  • Rate it:
  • 3
  •  
  • 2
Share this comment
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
2011-06-11 05:25:06 IST Report Abuse
அட, விட்டுத்தள்ளுங்க சார். அப்பீல் பண்ணி, சீக்கிரம் வெளியே வந்திடுவாங்க.
  • Rate it:
  • 9
  •  
  • 26
Share this comment
j kumar - toronto,கனடா
2011-06-11 05:10:10 IST Report Abuse
கனடா ரவி நீ எந்த உலகில இருக்கே
  • Rate it:
  • 27
  •  
  • 3
Share this comment
sathish - melbourne,ஆஸ்திரேலியா
2011-06-11 06:40:01 IST Report Abuse
அட விடையா,, அவரு இன்னும் ரெண்டாயிரத்து பதினொன்னு, ஏப்ரல் மாசத்துக்கு முன்னேயே இருக்காரு. முளிச்சதுக்கு அப்புறம் விளக்கலாம்,,...
  • Rate it:
  • 24
  •  
  • 2
Share this comment
Devi - Sydney,ஆஸ்திரேலியா
2011-06-11 04:55:39 IST Report Abuse
அட விடுங்கப்பா ... மானாட மயிலாட பார்த்துகிட்டே இருக்கட்டும்... கம்பனிக்கு...அட நம்ம தயா வருவார்ல ...
  • Rate it:
  • 53
  •  
  • 2
Share this comment
Sanjay Kumar - Chennai,இந்தியா
2011-06-11 06:56:06 IST Report Abuse
தேவி அவர்களே, அது மானாட மயிலாட இல்லை. அது நாயாட நரியாட நிகழ்ச்சி....
  • Rate it:
  • 50
  •  
  • 1
Share this comment
Rathinasamy Mohan - madurai,இந்தியா
2011-06-11 04:49:48 IST Report Abuse
தொழில் அதிபர்களுக்கு ஏஜெண்டாக இரூக்கும் நீரா ராதியா கைதுசெய்யப்படாதது ஏன். ஊழல்களை உருவாக்குவதே ஏஜண்டுகளும் தொழில் அதிபர்களும்தான். பெரும்பலன் அடைந்தது அவர்கள் தான். அவர்களை உள்ளே தள்ளாத வரை ஊழல் ஒழியப்போவதில்லை
  • Rate it:
  • 48
  •  
  • 3
Share this comment
poygainathan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2011-06-11 09:48:18 IST Report Abuse
dmk வோடு மட்டும் சம்பந்தப்படவில்லை என்றால்,காங்கிரஸ் கூடவும் என்று பப்ளிக்கா சொல்ல வேண்டியது தானே, நீரா ராதியா கைதுசெய்ய பட்டால், காங்கிரஸ் காரனும் உள்ளே போகவேண்டி இருக்கும், அதனால நீரா ராதியா கைதுசெய்ய மாட்டார்கள்,...
  • Rate it:
  • 4
  •  
  • 1
Share this comment
Muttal - newjersy,யூ.எஸ்.ஏ
2011-06-11 07:15:17 IST Report Abuse
கைது செய்யாதது மட்டும் அல்ல யாரும் அதை பற்றி பேசவே இல்லை..... ஏன் என்றால் dmk வோடு மட்டும் சம்பந்தப்படவில்லை...
  • Rate it:
  • 25
  •  
  • 2
Share this comment
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-06-11 04:42:23 IST Report Abuse
உண்மையாகவே இந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்களது பிஞ்சு குழந்தைகள் மீது "பாசம்" இருக்குமேயானால் என்ன செய்திருக்க வேண்டும்? செய்த ஊழலை ஒப்புக்கொண்டு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு மன்னிப்பை கோரலாம்.அல்லது குறைந்த பட்ச தண்டனையை ஏற்று வெளியே வர முயற்சிப்பதை விட்டுவிட்டு.. கண்கலங்கினார்..காத்து கலங்கினார் என்று செய்திகளை படித்தாலே எரிச்சல்தான் வருகின்றது..இவர்கள் என்னமோ தியாக சுடர்கள் போலவும்..ஆங்கிலேயர்கள் ஆட்சியில் வேண்டுமென்றே இந்த தியாக செம்மல்களை உள்ளே வைத்துள்ளது போன்றும்..ஸீன் ஏற்படுத்துவதை சகிக்க முடியவில்லை..!! பிள்ளைகள் பாவம்..பெற்றோர்களுக்கு பணமே பிரதானம் என்கிறபோது பிள்ளைகளுக்கு அவர்களது அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வருங்காலத்தில் இவர்களும் "தேசத்தில் குற்றவாளிகளாய்" மாறிவிடுவார்களோ என்றுதான் அஞ்ச தோன்றுகின்றது.!! எவ்வளவு பணம் இருந்தும்..இவர்களின் பணப்பேராசை..சமூகத்தில் இன்னும் என்னென்ன தேவையில்லாத மாற்றங்களை உருவாக்குமோ என்று தெரியவில்லை..!! பணப்பிசாசுகள்.. !!
  • Rate it:
  • 130
  •  
  • 4
Share this comment
H Narayanan - Hyderabad,இந்தியா
2011-06-11 07:18:27 IST Report Abuse
இல்லப்பா.. கண் கலங்கி.. நடித்து கொஞ்ச நாளில் வெளிய வந்து திரும்ப ஆட்டைய போடலாம்ல......
  • Rate it:
  • 34
  •  
  • 2
Share this comment
Ashok Raja - London,யுனைடெட் கிங்டம்
2011-06-11 03:52:31 IST Report Abuse
ரவி, சொம்பு தூக்கிறத நிறுத்திட்டு யோசிடா!
  • Rate it:
  • 38
  •  
  • 3
Share this comment
R. MURALI - singapore,இந்தியா
2011-06-11 03:20:33 IST Report Abuse
அழகிரி குடும்பத்துக்காகவும், முதலமைச்சர் ஜெயலலிதா கூறியது போல, கருணாநிதி பேரன்களின் கலர் டிவி மற்றும் கேபிள் டிவி வியாபாரதிற்காகவும், கலைஞர் கருணாநிதியினால் காவு கொடுக்கப்பட்டவர் கனிமொழி. மகளை பேரன் மற்றும் அழகிரியின் வாழ்வுக்காக காவு கொடுத்துவிட்டு, சொந்த மகளிடமே நாடகம் நடத்தும் நயவஞ்சகத்தை மிஞ்சுவதற்கு யாரும் இவருக்கு ஈடாக மாட்டார்கள். அதிமுக MLA கூறியது போல, தமிழை வைத்து குடும்பம் நடத்தும் ஒரே குடும்பம் இவரின் குடும்பம்தான்.
  • Rate it:
  • 94
  •  
  • 8
Share this comment
sathiah - chennai,இந்தியா
2011-06-11 01:33:47 IST Report Abuse
மு.க மொத்த குடும்பமும் ஜெயிலுக்கு போகவேண்டியவுகந்தான்
  • Rate it:
  • 87
  •  
  • 4
Share this comment
Krish - India,சிங்கப்பூர்
2011-06-11 00:35:12 IST Report Abuse
இவர்களது பிள்ளைகளுக்கு எதற்காக இவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று கூட தெரியாது. வருங்காலத்தில், இவர்களின் தவறுகளை அந்த பிள்ளைகள் புரிந்துகொண்டு, அந்த Generation னாவது, நல்ல வழியில் செல்லவேண்டும். அந்த இளம் மனதில், இந்த விஷயங்கள், விஷமாக மாறி விட கூடாது என்று நான் வேண்டிகொள்கிறேன்.
  • Rate it:
  • 68
  •  
  • 2
Share this comment
ravi - toronto,கனடா
2011-06-11 00:32:52 IST Report Abuse
கனிமொழி யாரையும் கொலை செய்யவில்லை. அவரை வீட்டுக்காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவு கொடுத்து இருக்கலாம். வேண்டுமென்றே செய்யப்படும் சூழ்ச்சி இது. விரைவில் அவர் குற்றமற்றவர் என்று நிருபிக்கப்பட்டு வெளியே வந்து தூற்றுபோர்களின் மூக்கை உடைப்பார். கனிமொழியை உள்ளே வைத்து நாடகம் ஆடுகிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரஸ் இல் உள்ள பெரும் தலைகள் வெளியே சுத்துகின்றன. சிபிஐ கனிமொழியை வைத்து நடத்தும் நாடகம் நீண்ட காலத்துக்கு செயல்படாது.
  • Rate it:
  • 23
  •  
  • 327
Share this comment
saravana kumar - tirupur,இந்தியா
2011-06-11 11:41:32 IST Report Abuse
உலகத்துலேயே ஊழல் பணத்தை செக் மூலமா வாங்குன ஒரே அறிவுக்கொழுந்து உங்க அக்கா தான். இதுல வக்காலத்து வேறயா?...
  • Rate it:
  • 12
  •  
  • 2
Share this comment
Selvam - Madurai,இந்தியா
2011-06-11 09:00:34 IST Report Abuse
இது ஒரு டம்மி பீசு விடுங்க பாவம்......
  • Rate it:
  • 9
  •  
  • 2
Share this comment
Sullan - cyberjaya,மலேஷியா
2011-06-11 06:00:31 IST Report Abuse
இதோ வந்துட்டான் ல ! ஜால்ரா போடுறதுக்கு...
  • Rate it:
  • 42
  •  
  • 4
Share this comment
Mani - Boston,யூ.எஸ்.ஏ
2011-06-11 05:53:06 IST Report Abuse
Seems to me like Mr. Ravi is the proxy for MK & co in Canada. But, I don't blame you Mr. Ravi, you speak for what you have been paid for. End of the day... money is what matters....
  • Rate it:
  • 36
  •  
  • 7
Share this comment
Bala Sreenivasan - Singapore,சிங்கப்பூர்
2011-06-11 05:34:09 IST Report Abuse
டொராண்டோ ரவி அவர்களே, ஆதாரம் இல்லாது அரசியல் செல்வாக்கு மிகுந்த திமுக குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பதென்பது அத்தனை சுலபமா? அல்லது, அப்படியே நடவடிக்கை எடுக்க துணிந்தாலும் அந்த குடும்பம்தான் கட்சி என்று ஆகிவிட்ட நிலையில் இங்கிருக்கும் உங்கள போன்ற திமுக தொண்டர்கள் சும்மா இருந்து விடுவார்களா? உண்மையை சத்தம் போடாமல் ஒப்புக்கொள்ளுங்கள். மக்கள் ஏக கோபத்தில் இருக்கிறார்கள்!...
  • Rate it:
  • 76
  •  
  • 9
Share this comment
Sanjay A - NJ,யூ.எஸ்.ஏ
2011-06-11 04:45:23 IST Report Abuse
யாரையும் சாதாரணமாக ஜெயிலில் போட முடியாது. அதுவும் இந்தியால no 1 பணகார family and முன்னால் சீப் minster பொண்ணு , சென்ட்ரல 3 காபினெட் மின்ஸ்டர். அவங்க familya உள்ளே தூக்கி வைகிற evidence இருக்கு. சிபிஐ கிட்ட strong ஆன evidence irruku . இல்லாட்டி நம்ம மஞ்ச துண்டு சும்மா விட்டுடுவாரா. அதனால தான் நம்ம மஞ்ச துண்டு சும்மா இருக்கிறாரு....
  • Rate it:
  • 146
  •  
  • 7
Share this comment
sathiah - chennai,இந்தியா
2011-06-11 01:35:37 IST Report Abuse
சாதிக் பட்சா ஈப்படி இறந்தார்?...
  • Rate it:
  • 103
  •  
  • 7
Share this comment
Kodees Karuppanan Athi - Chennai (Madras),இந்தியா
2011-06-11 01:31:44 IST Report Abuse
உண்மை வெளிவரும் போது நீங்களே பார்ப்பீர்கள் சிபிஐ செய்தது சரி என்று !!!...
  • Rate it:
  • 102
  •  
  • 8
Share this comment

உங்கள் கருத்தை பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்து பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
[X]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக