2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சன் டிவி நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
முன்னதாக சன் டிவியை 2ஜி ஊழலுடன் தொடர்புப்படுத்தி செய்திகள் வந்ததாலும், சென்னையில் தனது வீட்டில் டெலிபோன் எக்சேஞ்சை அமைத்து அதை சன் டிவிக்காக பயன்படுத்தியதாக கூறப்படும் புகார்கள் குறித்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ளதாலும் மும்பை பங்குச் சந்தையில் சன் டிவியின் பங்குகளின் விலை 28 சதவீதம் அளவுக்கு சரிந்தது. இது கடந்த ஓராண்டில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவாகும்.
அதே நேரத்தில் இன்று இதன் பங்குகளின் விலை 13.85 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. இந் நிலையில் மும்பை பங்குச் சந்தையில் சன் டிவி தாக்கல் செய்துள்ள விளக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சன் டிவி நெட்வொர்க் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோருக்கும் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
பிஎஸ்என்எல்லின் 323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் தனது இல்லத்தில் பயன்படுத்தினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டையும் உறுதியாக மறுக்கிறோம்.
சன் நெட்வொர்க்கிலோ, சன் டைரக்ட் நிறுவனத்திலோ தயாநிதி மாறனுக்கு சொந்தமாக எந்தப் பங்குகளும் இல்லை. சன் டைரக்ட் நிறுவன பங்குகளை சன் டிவி வைத்திருக்கவில்லை. மேலும் சன் டைரக்டில் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துடனும் எந்தவிதத் தொடர்பும் சன் டிவிக்கு இல்லை.
இத்தகைய குற்றச்சாட்டுகளால் வர்த்தகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
நிறுவனத்தின் புகழை சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
பல மொழிகளில் 20 தொலைக்காட்சி சேனல்கள், 45 வானொலி நிலையங்கள், 4 வார இதழ்கள், 2 தினசரிகள், ஒரு டிடிஎச் சேவை நிறுவனம் ஆகியவை சன் குழுமத்தில் உள்ளன. சன் டிவியில் மாறன் குடும்பத்தினர் 77 சதவீதப் பங்குகளை வைத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான சன் பிக்சர்ஸ் திரைப்படங்களைத் தயாரித்து வினியோகித்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் சுமங்கலி கேபிள் விஷன் என்ற கேபிள் வினியோக நிறுவனத்தையும் நடத்தும் சன் டிவி நிறுவனம் சமீபத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளையும் வாங்கி அதை சொந்தமாக்கியது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக