தமிழகத்தில் கோடைக்காலம் துவங்கிவிட்டதால், மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தமிழகத்தில் உள்ள அனல், புனல், காற்றாலை மின் உற்பத்தி அமைப்புகள் மூலம், 10 ஆயிரத்து 214 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், கோடைக்காலம் என்பதால் காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி குறைந்துவிட்டது.
அதேநேரம், "ஏசி', பிரிட்ஜ், ஏர்கூலர் உபயோகம் அதிகரித்துள்ளதால், தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவை, 11 ஆயிரத்து 200 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது.
மின் பற்றாக் குறையை சமாளிக்க, வெளிமாநிலங்களில் ஒரு யூனிட்டுக்கு, 10 முதல் 14 ரூபாய் கொடுத்து பீக் ஹவரில், 2,000 மெகா வாட் (20 லட்சம் யூனிட்) வரை வாரியம் மின் கொள்முதல் செய்கிறது. எனினும், தமிழகத்தின் மின் உற்பத்தி மற்றும் வெளிமாநில கொள்முதல் சேர்த்து, 9,500 மெகா வாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்ய முடிகிறது.
தேவை, 11,200 மெகா வாட்டாக உள்ள நிலையில், வினியோகம், 9,500 மெகா வாட்டாக இருப்பதால், 1,700 மெகா வாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், சென்னை தவிர, தமிழகத்தின் பிற பகுதிகளில் நாள்தோறும் மூன்று மணி முதல் அய்ந்து மணி நேரம் வரை மின் தடை செய்யப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக