ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரூ.2 கோடி தங்க நாற்காலியில் அமரும் கர்நாடக அமைச்சர்



  கர்நாடக சுற்றுலா மற்றம் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் ஜி.ஜனார்தன ரெட்டி தங்க நாற்காலியில்தான் அமருகிறார். அந்த தங்க நாற்காலியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ரூ. 2.2 கோடி. கர்நாடக சுற்றுலா மற்றும் உள்கட்டமைப்பு துறை அமைச்சர் ஜி.ஜனார்தன ரெட்டி லோக் அயுக்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது சொத்து விபர அறிக்கையில் பல்வேறு முக்கிய விபரங்களை தெரிவித்து இருக்கிறார். இவருக்கு தங்க நாற்காலி ஒன்று இருக்கிறது. அதன் மதிப்பு ரூ. 2.2 கோடி. அந்த நாற்காலியில்தான் அவர் அமருகிறார். தங்கத்தால் செய்யப்பட்ட விக்ரகங்களுக்கு அவர் பூஜை செய்கிறார். அவற்றின் மதிப்பு 2.58 கோடி. அவர் ரூ. 13.15 லட்சம் மதிப்புள்ள பெல்ட்டைத்தான்  அணிந்துகொள்கிறார்
.
இவரது வீட்டில் இருக்கும் தங்கத்தினால் ஆன  தட்டுக்கள், தங்க கிண்ணங்கள், கரண்டிகள் மற்றும் குத்துக் கரண்டிகள், கத்தி இவைகளின் மதிப்பு மட்டும் ரூ. 20.87 லட்சமாகும். கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிவரையுள்ள சொத்து விபரங்களை 2010 ஜூன் 25 ம் தேதி ஜனார்த்தன ரெட்டி லோக் அயுக்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அதிலிருந்துதான் இந்த விபரங்கள் கிடைத்துள்ளன.
இவர் தாக்கல் செய்துள்ள ஆபரண சொத்துக்கள் பட்டியல் மட்டும் 3 பக்கங்களுக்கு விவரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். பல்வேறு விதமான தங்க வளையல் செட்டுகள், நீலக்கல், சிவப்புக்கல், நவரத்தினங்கள், தங்கத்தால் ஆன விலைமதிப்பற்ற ஏனைய பொருட்கள், தொங்கு அணிகலன்கள், நெக்லஸ்கள், காதணிகள், ஆடவர் ஆபரணங்கள், மோதிரங்கள், தங்க விக்ரகங்கள் என்று ஏராளமான விலை உயர்ந்த ஆபரணங்கள் இவருக்கு இருப்பதாக இந்த பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான வெள்ளி பொருட்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலான வெள்ளி பொருட்கள் மேஜைகளிலும், பூஜை அறைகளிலும் பயன்படுத்தப்படுபவை. இவற்றின் மதிப்பு பல லட்சங்கள் இருக்கும் என்றும்ம் மதிப்பிடப்பட்டுள்ளது.   வீட்டில் பயன்படுத்தப்படும் ஏர் கண்டிஷனர்கள், தொலைக்காட்சி பெட்டிகள், மேஜை, நாற்காலிகள் அனைத்துமே விலை உயர்ந்தவை.
விவசாய நிலங்கள், கட்டிடங்கள், பூர்வீக சொத்துக்கள் நீங்கலாக ஜனார்தன ரெட்டிக்கு உள்ள சொத்துக்களின் மதிப்பு 153.48 கோடி. இவரது  சம்பளம் 31.54 கோடி என்றும் இவரது வர்த்தக வருமானம் ரூ.18.30 கோடி என்றும் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக