"வீடுகளில் கொசு வராமல் இருக்க பிரத்யேக "லைட்' உபயோகிக்குமாறு,' கூறி, பொதுமக்களிடம் நூதன மோசடி நடந்து வருகிறது. கும்பகோணம்தில் தற்போது எங்கு திரும்பினாலும் "கொசு லைட்' என்ற பெயரில் லைட்டுகள் கூவி,கூவி விற்பனை செய்யப்படுகிறது.
"இந்த விளக்கை வாங்கி உபயோகித்தால் வீட்டில் கொசு மட்டுமல்ல, பூச்சி, பூரான், பல்லி,'
போன்றவையும் வராது. அதற்கு காரணம், கொசு விரட்டி திரவம் கலந்த கலவையில் "லைட்' தயாரிக்கப்பட்டதாக,' கூறுகின்றனர். பிரபல நிறுவனங்களின் கொசு விரட்டும் உபகரணங்களே பயனற்று போய்விடும் நிலையில், ஒளி மூலம் கொசுவை விரட்டும் இந்த பிரத்யேக "லைட்' 20 ரூபாய் என விற்கப்படுகிறது. பொதுமக்களும் அதை நம்பி வாங்கி உபயோகித்து வருகின்றனர். நிரூபிக்கப்படாத தகவலைக்கூறி, பொதுமக்களிடம் நடந்து வரும் இது போன்ற நூதன மோசடியில் சிக்கி பலரும் ஏமாந்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக